வழிப்பறி கொள்ளையர்கள் சென்னையில் கைது.
வியாசர்பாடி பகுதியில் செல்போன் வழிப்பறி செய்த மணிமாறன்( வியாசர்பாடி),சூர்யா(வியாசர்பாடி) ஆகிய 2 நபர்கள்P-3 வியாசர்பாடி காவல் குழுவினரால் கைது. ரூ.17,000 மதிப்புள்ள 1 செல்போன் கைப்பற்றப்பட்டது (28.02.2021).
P-3 Vyasarpadi Police nab two accused for snatching cell phone in Vyasarpadi area – 1 cell phone worth Rs.17,000/- seized (28.02.2021).
சென்னை, வியாசர்பாடி,பகுதியைச் சேர்ந்த சங்கர், வ/45,என்பவரிடம் 27.02.2021 அன்று காலை இருசக்கர வாகனத்தில் வந்த 3 நபர்கள் கத்தியைக் காட்டி மிரட்டி கையால் தாக்கி அவர் வைத்திருந்த ரூ.17 ஆயிரம் மதிப்புள்ள விவோ செல்போனை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றசம்பவம் குறித்து சங்கர் P-3 வியாசர்பாடி காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின்பேரில், வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
P-3 வியாசர்பாடி காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் சம்பவ இடத்தினருகில் விசாரணை செய்து, அங்கு பொருத்தியிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, மேற்படி வழிப்பறியில் ஈடுபட்ட 1.மணிமாறன், வ/23,, வியாசர்பாடி, 2.சூர்யா, வ/21, வியாசர்பாடி ஆகிய 2 நபர்களை நேற்று (27.02.2021) கைது செய்தனர். அவர்களிடமிருந்து புகார்தாரரின் விவோ செல்போன் கைப்பற்றப்பட்டு ,அவர் மீது நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
Shankar, M/45 of Vyasarpadi preferred a complaint stating that on 27.02.2021, 3 persons threatened him with knife and snatched away his cell phone. In this regard a team led by the Inspector of Police P-3 Vyasarpadi PS conducted investigation and identified the accused as 1)Manimaran M/23 and 2) Surya, M/21 of Vyasarpadi. The accused were arrested and legal action is being pursued against them.
