Police Recruitment

வருகிற ஏப்ரல் மாதம் நடைபெற உள்ள தமிழக சட்டமன்ற தேர்தல் பாதுகாப்பை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் உத்தரவுப்படி காவல்துறையினர் மேற்கொண்டு வரும் பல்வேறு நடவடிக்கைகள்.

வருகிற ஏப்ரல் மாதம் நடைபெற உள்ள தமிழக சட்டமன்ற தேர்தல் பாதுகாப்பை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் உத்தரவுப்படி காவல்துறையினர் மேற்கொண்டு வரும் பல்வேறு நடவடிக்கைகள்.

♻️வருகிற தமிழக சட்டமன்ற தேர்தல் பாதுகாப்பை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு ஜனவரி 1 முதல் கடந்த இரண்டு மாதங்களில் 37 பேர் குண்டர் தடுப்புச்சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு குண்டர் சட்டத்தில் சிறையிலடைக்கப்படுவார்கள் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் எச்சரித்துள்ளார்.

♻️அதே போன்று 107, 109 மற்றும் 110 குற்ற விசாரணை நடைமுறைச் சட்டப்படி 1280 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஜாமீனில் விடக்கூடாத பிடியாணை பிறப்பிக்கப்பட்ட (Non Bailable Warrant) 116 பேர் சிறையிலடைக்கப்பட்டுள்ளனர்.

♻️தூத்துக்குடி மாவட்டத்தில் 536 பேர் உரிமம் பெற்று துப்பாக்கி வைத்துள்ளனர், அவர்களில் 441 பேர் தங்களது துப்பாக்கிகளை காவல் நிலையங்களில் சரண்டர் செய்துள்ளனர், இதில் 65 பேர் அரசாங்கத்தால் விதி விலக்கு பெற்றவர்களாவார்கள். மீதம் உள்ள சரண்டர் செய்யாத 30 துப்பாக்கிகளையும் சரண்டர் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

♻️வருகிற ஏப்ரல் மாதம் நடைபெற உள்ள தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பொதுமக்கள் எவ்வித இடையூறும் இல்லாமல், அச்சமின்றி நேர்மையான முறையில் அனைத்து வாக்காளர்களுக்கு வாக்களிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவுப்படி மாவட்டம் முழுவதும் அதிரடியாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் தலைமையில் எல்லை பாதுகாப்பு படையினர், தமிழ்நாடு சிறப்புக் காவல் படையினர், ஆயுதப்படையினர், உள்;ர் காவல்துறையினர் 200 பேர் கொண்ட கொடி அணிவகுப்பு பதற்றமான பகுதிகளான தூத்துக்குடி நகரம், ஆத்தூர், ஆறுமுகநேரி, ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர், உடன்குடி மற்றும் கோவில்பட்டி ஆகிய இடங்களில் நடைபெற்றது.

♻️தேர்தல் நடத்தை விதிகளை மீறுவது, வாக்களிக்க கையூட்டாக பணமாகவோ, பொருளாகவோ பெற்றாலோ, கொடுத்தாலோ சட்டப்படி குற்றமாகும். சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், பொதுமக்கள் அச்சமின்றி நேர்மையான முறையில் அனைத்து வாக்காளர்களும் வாக்களித்து தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றுமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.