விருதுநகர் மாவட்டம்:-
தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பொதுமக்கள் அச்சமன்றி வாக்களிக்கும் வகையில் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் துணை ராணுவப்படையினர் மற்றும் போலீசார் இணைந்து கொடி அணிவகுப்பு நடைபெற்றது…
சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் தேர்தலில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கும் வகையிலும் , அமைதியான முறையில் தேர்தல் நடத்த பொது மக்கள் ஒத்துழைப்பு தரவேண்டும் என்பதை வழியுறுத்தியும் துணை ராணுவ படையினர் மற்றும் போலீசார் இணைந்து நடத்திய கொடி அணி வகுப்பு நடைபெற்றது.
இந்த கொடியணிவகுப்பானது புதிய பேருந்து நிலையத்தில் இருந்து துவங்கி பிரதானசாலையான சிவன் கோவில், பஜார், அகமுடையார் மஹால், எம்.எஸ் கார்னர், திருச்சுழி ரோடு உள்ளிட்ட நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று இறுதியில் காந்திநகரில் நிறைவுபெற்றது.
அணிவகுப்பில் அருப்புக்கோட்டை காவல்துறை துணை கண்காணிப்பாளர் மற்றும் கமாண்டிங் ஆபீஸர் தலைமையில் நடைபெற்ற இந்த கொடி அணிவகுப்பில் கையில் நவீன எந்திர துப்பாக்கி ஏந்திய துணை ராணுவ படை வீரர்கள் மற்றும் நகர், தாலுகா , குற்றப்பிரிவு மற்றும் போக்குவரத்து போலீசார் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
