Police Department News

மனைவி, மாமியார் டார்ச்சரினால், விஷம் குடித்த மதுரை காவலரின் கடைசி ஆசை, போலீசாருக்கு வார விடுமுறை விடுங்க

மனைவி, மாமியார் டார்ச்சரினால், விஷம் குடித்த மதுரை காவலரின் கடைசி ஆசை, போலீசாருக்கு வார விடுமுறை விடுங்க

மதுரை மாநகர், அவணியாபுரம், போலீஸ் குடியிருப்பில் வசித்து வருபவர் பொண்ணுச்செல்வம்,வயது 35, இவர் மதுரை தெற்கு வாசல் காவல் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு பிரிவில் காவலராக பணியாற்றுகிறார், இவரது மனைவி குறிஞ்சிமலர் இவர்கள் இருவருக்கும் கருத்துவேறுபாடு இருந்து வருகிறது. இந்த நிலையில் பொண்ணுச்செல்வம் தனது முகநூலில் கடிதம் ஒன்றை வெளியிட்டார். அதில் கூறியிருப்பதாவது என் சாவுக்கு எனது மனைவியும், மாமியார் மீனாவுந்தான் காரணம் என்னை மிரட்டி . என் அம்மாவிடம் செல்லக்கூடாது என தடுக்கின்றனர். என் தங்கையுடன் பேசக் கூடாது என தடுக்கின்றனர் , என்னுடைய முழுசம்பளத்தையும் கேட்கின்றனர், தர மறுத்தால் என் சட்டையை கழற்றி விடுவேன் என மிரட்டுகின்றனர், இவர்களை போலீசார் தண்டிக்க வேண்டு்ம், என் மீது வீண் பலி சுமத்துகின்றனர். என்னால் நிம்மதியாக வேலை செய்ய முடியவில்லை, என்னுடைய கடைசி ஆசை போலீஸ் உயர் அதிகாரிகளையும் , முதல்வர் ஐயாவையும் கேட்டுக் கொள்கிறேன், என் போன்ற அடிமட்ட போலீசார் மிகவும் கஷ்டப்படுகின்றனர், அவர்களுக்கு கேரளா போன்று சங்கம் தர வேண்டாம், ஆந்திரா போன்று சம்பளம் தர வேண்டாம், வாரம் ஒரு நாள் விடுமுறை அறிவியுங்கள் அதுவே எனது கடைசி ஆசை. இவ்வாறு அவர் கூறியுள்ளார். இதை பார்த்த சக போலீசாரும், நண்பர்களும் அதிர்ச்சி அடைந்தனர் நேரில் சென்று பார்த்த போது விஷம் குடித்திருந்தார் உடனடியாக அவரை மருத்துவ மனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தனர் தற்போது உடல் நலம் தேறி வருகிறார் இதற்கிடையே முகநூலில் அவர் பதிவிடடிருந்ததை போலீஸ் உயர் அதிகாரிகளின் அறிவுருத்தலின்படி நீக்கப்பட்டது. பொண்ணுச் செல்வம் அவர்கள் ஒரு நல்ல மனிதர், இரக்க குணம், மிக்கவர், ஒரு சமயம் மனநிலை பாதிக்கப்பட்ட ஒரு நபரை தன் சொந்த முயற்ச்சியால் அவர்களது பெற்றோரிடம் கொண்டு சேர்த்தார், இந்த செய்தியும் நமது போலீஸ் இ நியூஸில் நாம் வெளியிட்டிருந்தோம் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.