Police Department News

திருத்தங்கல் காவல் நிலையத்தின் சார்பில் திக்கற்றோருக்கு உணவு வழங்கப்பட்டது.

விருதுநகர்மாவட்டம்:-

திருத்தங்கல் காவல் நிலையத்தின் சார்பில் திக்கற்றோருக்கு உணவு வழங்கப்பட்டது.

சாலையில் செல்பவர்கள் முககவசம் அணியாத சிலருக்கு இலவசமாக முககவசம் வழங்கினார்.

திருத்தங்கல் காவல்நிலையத்தில்சார்பு ஆய்வாளராக பணியாற்றி வருபவர் திரு.காளிதாசன் அவர்கள்.

கொரோனா காலகட்டத்தில் சாலையின் ஓரத்தில் உண்ண உணவின்றி தவிக்கும் நபர்கள் எத்தனையோ பேர்.

அவர்களுக்கு அன்றாடம் உணவு என்பது கானல் நீர்தான் என்றாலும் வயிறார உணவு என்பது சற்று கடினமான ஒன்றாகும்.

அன்றாடம் உணவிற்காக தவிக்கும் நபர்களுக்கு தன் சொந்த செலவில் கொரோனா இரண்டாம் அலையால் ஊரடங்கு காலத்தில் பசியால் வாடும் சாலையோர ஆதரவற்றோருக்கும் மற்றும் முதியோர்களுக்கும் காலை உணவு உட்பட கபசுர குடிநீர் மற்றும் முககவசம் வழங்கி உதவினார்.

திருத்தங்கல் சார்பு ஆய்வாளரின் பணிகள் மென்மேலும் சிறப்புற போலீஸ் இ நியூஸ் சார்பாக வாழ்த்தினை தெரிவித்துக் கொள்கிறது.

Leave a Reply

Your email address will not be published.