மதுரை, வில்லாபுரம் பகுதியில் தலைமறைவு குற்றவாளி கைது
மதுரை, அவணியாபுரம் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு. ஜெயபாண்டியன் அவர்கள் வில்லாபுரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார்கள், அப்போது அங்கிருந்த பஸ் நிறுத்தம் அருகே சந்தேகத்திற்கிடமாக நின்ற வாலிபரை பிடித்து விசாரித்தார், அதில் அவர் வில்லாபுரம், காஜா தெருவை சேர்ந்த ஜோதிலிங்கம் மகன் சபரிநாதன் வயது 21, என தெரியவந்தது. இவர் அவணியாபுரம், கீரைத்துரை பகுதிகளில் களவு, கொலை முயற்ச்சி வழக்குகளில் தொடர்பு உடையவர் என்பதும், ஒரு வழக்கில் தேடப்படும் குற்றவாளி எனவும் தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து 24 ஆயிரத்தை பறிமுதல் செய்னர்
