சென்னையில் நகை திருடர்கள் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ்குமார் இ.கா.ப உத்தரவின் அடிப்படையில் கைது செய்யப்பட்டனர்.
அண்ணாநகர் பகுதியில் வீடுகளின் பூட்டை உடைத்து தங்க நகைகளை திருடிய கார்த்திக்குமார் (எ) எஸ்கேப் கார்த்திக் மற்றும் பரத்குமார் (எ) பரத் ஆகியோர் K-4 அண்ணாநகர் காவல் குழுவினரால் கைது. சுமார் ரூ.20 லட்சம் மதிப்புள்ள 64 சவரன் தங்க நகைகள் மற்றும் ரொக்கம் ரூ.10,50,000/- மீட்கப்பட்டது(11.03.2021).
K-4 Anna Nagar Police team arrested Karthick kumar @ Escape Karthick and Bharath kumar @ Bharath for stealing gold jewels at Anna Nagar – 64 sovereigns of gold jewels worth about Rs.10,50,000/- was seized (11.03.2021).
சென்னை, அண்ணாநகரைச் சேர்ந்த நடராஜன், வ/52, என்பவர் 13.1.2021 அன்று தனது வீட்டை பூட்டி விட்டு ஊருக்கு சென்று விட்டு திரும்பி வந்து பார்த்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் வைத்திருந்த 8 சவரன் தங்க நகைகள் மற்றும் பணம் ரூ.4 லட்சம் திருடு போயிருந்தது தெரியவந்துள்ளது. இது குறித்து K-4 அண்ணாநகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின்பேரில், K-4 அண்ணாநகர் காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் சிசிடிவி கேமரா பதிவுகளின் உதவியுடன் மேற்படி திருட்டு சம்பவம் மற்றும் பல திருட்டில் ஈடுபட்ட 1. கார்த்திக்குமார் (எ) எஸ்கேப் கார்த்திக், வ/32, பெங்களூரு 2. பரத்குமார் (எ) பரத், வ/39, பெங்களூரு ஆகிய இருவரை கைது செய்து, அவர்களிடமிருந்து ரூ.20 லட்சம் மதிப்புள்ள 64 சவரன் தங்க நகைகள் மற்றும் ரொக்கம்(ரூ.10,50,000/- கைப்பற்றப்பட்டது. மேலும் நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
On the complaint preferred by Natrajan, M/52, of Anna Nagar that unknown persons break open the lock of his house on 13.01.2021 and stolen 8 sovereigns gold jewels, a case was registered in K-4 Anna Nagar PS. A team led by the Inspector of Police investigated the case with the help of CCTV footages and identified the accused as 1)Karthick kumar @ Escape Karthick, M/32 and 2)Bharath kumar @ Bharath, M/39 both from Bengaluru and arrested them. 64 sovereign gold jewels worth Rs.10,50,000/- were seized and legal action is being pursued against them.
