Police Department News

திருப்பரங்குன்றம் அருகே பர்னிச்சர் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் 12 லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்

திருப்பரங்குன்றம் அருகே பர்னிச்சர் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் 12 லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்

மதுரை பழங்காநத்தம் அருகே வசந்த நகரில் வசிப்பவர் பாபு ( வயது 37 )இவருக்கு சொந்தமான பர்னிச்சர் உற்பத்தி செய்யும் நிறுவனம் வில்லாபுரம் வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் உள்ளது.
நேற்று இரவு இவரது பர்னிச்சர் தயாரிப்பு நிறுவனத்தின் அருகே குப்பையில் எறிந்த தீ பரவி பர்னிச்சர் கடைக்குள் தீ பிடித்ததால் சிலிண்டர் வெடித்து சிதறியது இதனால், கடை முழுவதும் தீப்பற்றி எரிந்தது.
தகவலறிந்து வந்த மதுரை டவுன் பொறுப்பு தீயணைப்பு நிலைய அலுவலர் உதயகுமார் தலைமையிலான வீரர்கள் தீயை அணைத்தனர்.. இதில் சுமார் 12 லட்ச ரூபாய் மதிப்புள்ள பர்னிச்சர் பொருட்கள் சேதம் அடைந்ததாக கூறப்படுகிறது.
தீ விபத்து குறித்து அவனியாபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.