Police Department News

மதுரை, செல்லூர் பகுதியில் உடல் நலமில்லாத மூதாட்டி மரணம், செல்லூர் போலீசார் விசாரணை

மதுரை, செல்லூர் பகுதியில் உடல் நலமில்லாத மூதாட்டி மரணம், செல்லூர் போலீசார் விசாரணை

மதுரை மாநகர் செல்லூர் D2, காவல்நிலையம் எல்லைக்குட்பட்ட பகுதியான செல்லூர், அஹிம்சாபுரம் 7 வது தெருவில் வசித்து வருபவர் பாஸ்கரன் மகன் பாண்டியராஜன் வயது 26/21, இவரது தந்தை கடந்த 21 ஆண்டுகளுக்கு முன்பே இறந்து விட்ட நிலையீல் இவர் தன் தாயாருடன் மேற்படி விலாசத்தில் வசித்து வந்தார், இவரது சகோதரி பெயர் சண்முகபிரியா, இவரை சிவா என்பவருக்கு திருமணம் முடித்து இவர்கள் தனியே வசித்து வருகிறார்கள் பாண்டியராஜன் தங்கமயில் ஜுவல்லரி என்ற தனியார் நகை கடையில் பணி புரிந்து வருகிறார். இவர் தினசரி காலை 8.30 மணிக்கு பணிக்கு சென்று விட்டு இரவு 9 மணிக்குதான் வீடு திரும்புவார், இந்த நிலையில் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு இவரது தாயாருக்கு ஆஞ்சியோ சிகிச்சை செய்யப்பட்டு இருந்த நிலையில் கடந்த 22/02/21 அன்று இரவு சுமார் 11 மணியளவில் இவர் வாந்தி எடுத்துள்ளார் உடனே இவரை அருகில் இருந்த சரவணன் மருத்துவ மனைக்கு அழைத்து சென்று சிகிச்சை எடுத்தனர். அதன்பின் கடந்த 28 /02/21 ம் தேதி அருகில் குடியிருக்கும் நபர்கள் இவரக்கு உடல்நிலை சரியில்லையென கூறவே வீட்டிற்க்கு வந்து தன் தாயாரை ESI மருத்துவ மனைக்கு அழைத்து சென்றனர். இங்கு 03/03/21 வரை சிகிச்சையில் இருந்த இவர் அங்குள்ள மருத்துவர்களின் பரிந்துரையின்படி மதுரை அரசு மருத்துவ மனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பப்பட்டார், அதன்பின் மறுநாள் 04/03/21 காலை சிகிச்சை பலனளிக்காமல் இறந்து விட்டார், இது பற்றி விசாரித்த போது உடல் உபாதையால் அதிக அளவு மாத்திரைகள் சாப்பிட்டதாக கூறியதாக தெரிகிறது. எனவே இது சம்பந்தமாக சட்டப்படி விசாரணை செய்து, உடலை நல்லடக்கம் செய்ய உதவும்படி புகார் D2, காவல்நிலையத்தில் அளிக்கப்பட்டது புகாரை பெற்றுக்கொண்ட காவல் ஆய்வாளர் திரு. அழகர் அவர்களின் உத்தரவின்படி சார்பு ஆய்வாளர் திரு. ஜான் அவர்கள் விசாரணை நடத்தி வருகிறார்.

Leave a Reply

Your email address will not be published.