தென்மண்டல சட்டம், ஒழுங்கு கூடுதல் டிஜிபியாக Dr.ஆபாஷ்குமார்,IPS நியமனம்.
தென்மண்டல சட்டம், ஒழுங்கு கூடுதல் டிஜிபியாக Dr.ஆபாஷ்குமார்,IPS நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
தென்மண்டல சட்டம் ஒழுங்கு ஐஜியாக இருந்த முருகன் தேர்தல் பணியில் பயன்படுத்தப்படக்கூடாது என்றும் அவரை பதவியில் இருந்து மாற்றும்படி தலைமை தேர்தல் ஆணையம் கடந்த வாரம் தமிழக அரசுக்கு உத்தரவிட்டிருந்தது . அதனைத் தொடர்ந்து தென்மண்டல ஐஜி பதவியை மதுரை போலீஸ் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்கா கூடுதல் பொறுப்பாக கவனித்து வந்தார் . இந்நிலையில் தென்மண்டல ஐஜி பதவிக்கு கூடுதல் டிஜிபி அந்தஸ்த்தில் ஒருவரை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது . அது தொடர்பாக தமிழக அரசின் தலைமைச் செயலாளர் பிரபாகர் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது : பொருளாதாரக்குற்றப்பிரிவு கூடுதல் டிஜிபி Dr.ஆபாஷ்குமார்,IPS தென்மண்டல சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபியாக நியமிக்கப்படுகிறார் . தென்மண்டல ஐஜி பதவி கூடுதல் டிஜிபி அந்தஸ்துக்கு உயர்த்தப்பட்டுள்ளது .
தென்மண்டல ஐஜி பதவி கூடுதல் டிஜிபி அந்தஸ்துக்கு உயர்த்தப்பட்டுள்ளது, இதுவே தமிழக காவல்துறையில் முதன்முறையாகும் .
