சென்னை , எழும்பூரில் உள்ள காவலர் மருத்துவ மனையில் காவல் முன் களப்பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது
சென்னை பெருநகர காவல்.
இன்று .25.3.2021 காலை சென்னை எழும்பூரில் உள்ள காவலர் மருத்துவமனையில் முன்கள பணியாளர்களானசென்னை பெருநகர காவல் துறையினரின் ஆயுதப்படை பெண் காவலர்கள் காவல் கட்டுப்பாட்டறை அதிகாரிகள் ஆளி நர்களுக்கு கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுசென்னை பெருநகர காவல் ஆணையர் திரு மகேஷ்குமார் அகர்வால் இ.கா.ப. அவர்கள் அதிகாரிகளுடன் காவல்துறையினரை சந்தித்து விழிப்புணர்வு சார்ந்து விவரங்கள் பகிர்ந்து தடுப்பு ஊசி செலுத்தி கொள்ளும் அவசியத்தை கூறி உற்சாகப்படுத்தி மருத்துவர் மற்றும் செவிலியர்களை சந்தித்து கொரோனா தடுப்பு சார்ந்த நடவடிக்கை குறித்து கலந்தாலோசித்து காவல் அதிகாரிகளுக்கு உரிய அறிவுரைகள் வழங்கினார்கள்.இந்நிகழ்வில்இணைஆணையர்.திருமதி.லெஷ்மி.இ.கா.ப (தெற்கு மண்டலம்) துணை ஆணையர்கள் முனைவர் சாமிநாதன்.இ.கா.ப (நவீன கட்டுப்பாட்டுஅறை).
திரு.பகலவன்.இ.கா.ப(திருவல்லிக்கேணி)திரு.சவுந்தரராஜன்(ஆயுதப்படை)
மற்றும் மருத்துவர்கள் காவல் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

