மதுரை, பைகாராவில் 6 ரவுடிகள் கைது, 40 கிலோ கஞ்சா பறிமுதல், சுப்பிரமணியபுரம் போலீசார் அதிரடி நடவடிக்கை
மதுரை மாநகரம், பைகாரா பகுதியில் ரயில்வே தண்டவாளம் அருகே மர்ம கும்பல் நடமாட்டம் இருப்பதாக சுப்பிரமணியபுரம் C2, காவல்நிலையம் ஆய்வாளர் திருமதி.கலைவாணி அவர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்ததை தொடர்ந்து அவர்களின் உத்தரவின்படி சார்பு ஆய்வாளர் திரு.சிவப்பிரகாசம் தலைமையில் காவலர்கள் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை நடத்தினர். அங்கு 10 க்கும் மேற்பட்டோர் கொண்ட கும்பல் ஆயுதங்களுடன் பதுங்கி இருந்தது. அவர்கள் காவலர்களை கண்டதும் ஓட்டம் பிடித்தனர். ஆனால் காவலர்கள் அவர்களை சுற்றி வளைத்து பிடித்தனர். அவர்களிடமிருந்து 3 மோட்டார் சைக்கிள்கள் , 40 கிலோ கஞ்சா, 3 கத்தி, 2 வீச்சரிவாள் மற்றும் சூரிகத்தி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு, போலீசார் அவர்களை கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தியதில் அவர்கள் கப்பலூர், காந்திநகரை சேர்ந்த சரவணன் என்ற தழும்பு சரவணன், தவிட்டுச் சந்தை கீரைத்துறை சூர்யா, திருநகர் திருமலை, கள்ளிக்குடி அகத்துபட்டி சித்திரைவேல் என்ற சூர்யா, பைகாரா முத்துராமலிங்கபுரம் கோபி, பீபீகுளம் கீர்த்தி, வினாயகர் கோவில் தெரு, தீபக் என்ற குட்டை கருவாயன், என்பது தெரிய வந்தது. இவர்கள் மீது மதுரை மாநகர் காவல்நிலையங்களில் பல வழக்குகள் உள்ளன. இவர்கள் கஞ்சா விற்பனை செய்தது, பயங்கர ஆயுதங்களுடன் சுற்றித் திரிந்தது ஆகிய குற்றங்களுக்காக மேற்கண் 6 பேரையும் சுப்பிரமணியபுரம் போலீசார் கைது செய்தனர்.
தப்பியோடிய வாழப்பாலம் சிவக்குமார் உள்பட சிலரை போலீசார் தேடி வருகின்றனர், மதுரை மாநகரில் கஞ்சா மற்றும் பயங்கர ஆயுதங்களுடன் 6 ரவுடிகள் பிடிபட்ட சம்பவம் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
