காவலரை பற்றி ஒரு இளைஞன் பதிவிட்ட பதிவு:
என் இருசக்கர வாகனம் எரிபொருள் இல்லாமல் தீவு திடல் அருகே நின்று விட்டது. அங்கே போக்குவரத்து காவல் பணியில் இருந்த திரு.தாமோதரன் அவர்கள் என்னை அழைத்து நடத்திய விதம் மிக மிக அருமை, இப்படியும் போக்குவரத்து காவலர்கள் உள்ளனர் என்று மனம் குளிர்ச்சி அடைகிறது. அவர் சிறிது நேரம் கூட என்னை வெயிலில் நிற்க விடவில்லை, அக்கறையோடு பேசினார், அதுபோக தன்னுடைய வாகனத்தில் இருந்து எரிபொருள் எடுத்து தருகிறேன் தாங்கள் பத்திரமாக சென்று வாருங்கள் என்றார். அதற்குள் நான் ஏற்கனவே எரிபொருள் வாங்கி வர சொல்லிருந்த என் அலுவலக நண்பர் வந்து விட்டார். நானும் திரு.தமோதரனிடம் கைகுலுக்கி செல்பி எடுத்துக்கொண்டு விடைபெற்றேன்.
விடைபெறும் முன் நன்றி கூறியத்திற்கு அவர் சொன்னது, “தினம் ஓர் நன்மையை செய், நன்றியை எதிர்பாக்காதே” காவலர் மத்தியில் இவர் ஒரு கதாநாயகனே.
நான் இம்மாதிரி பதிவுகள் அதிகம் போட மாட்டேன், ஆனால் அவரின் நல்ல உள்ளம் என்னை பதிவிட செய்தது. அவர் இந்த சேவையை தொடர்ந்திட என் பிரார்த்தனைகள் என்று அந்த இளைஞன் பதிவிட்டிருந்தார்.
