மதுரை மாவட்டம் மேலூர் நகை கடையில் நகை வாங்குவது போல், நடித்து திருடியவர் கைது
மதுரை மாவட்டம் மேலூரில் உள்ள ஒரு நகை கடையில் நகை வாங்குவது போல் நடித்து நகையை எடுத்து சென்ற ஆசாமியை கடைக்காரர்கள் பிடித்து மேலூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
மதுரை மாவட்டம் மேலூரில் நகைக்கடை பஜார் பகுதியில் உள்ள ஒரு நகைக் கடையில் சில நாட்களுக்கு முன்பு நகை வாங்குவது போல் நடித்து அரை பவுன் மோதிரத்தை ஒருவர் திருடி சென்றார், அந்த நபர் நேற்றும் அதே போல் வந்து நகை கடையில் நகைகளை எடுக்க முன்ற போது , அவரை கடைக்காரர்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
இந்த சம்பவம் குறி்த்து மேலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் அவரது பெயர் வெற்றிவேல் என்பதும் அவர்கள் வழக்கமாக இது போன்ற திருட்களில் ஈடுபட்டு வருபவர் எனவும் தெரிய வந்தது. அவரை கைது செய்து சட்ட நடவடிக்கை மேற்கொண்டனர்.
