மதுரை நேதாஜி ரோடு பகுதியில் மின்கம்பத்தில் தொடரும் விபத்தால் மக்கள் அச்சம்
மதுரை நேதாஜி ரோடு பகுதியில் மின்கம்பத்தில் தொடரும் விபத்து.விபத்துக்களால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.
மதுரை, பெரியார் பேருந்து நிலையம் நேதாஜி ரோட்டில் இன்று காலை 12 மணியளவில் மின்கம்பத்தில் புகை வந்துள்ளது, சற்று நேரத்தில் தீ பற்றி எரிய ஆரம்பித்தது, இதை பார்த்த அந்த பகுதி வணிகர்கள் உடனடியாக மதுரை டவுன் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த நிலைய அலுவலர் திரு. கண்ணன் மற்றும் தீயணைப்பு வீரர்கள் மின்சார இணைப்பை துண்டித்து தண்ணீர் பீச்சி எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்தனர்.
இதனால் நடக்கவிருந்த பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன்பு மேல மாசி வீதி, தெற்கு மாசி வீதி சந்திப்பில் டிஎம் கோர்ட் பக்கத்தில் மின் மாற்றி தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மதுரை கார்பரேஷன் மக்கள் அச்சத்தை போக்க வேண்டும்.
