எச்சில் துப்பினால் ரூ.500, முக கவசம் அணியாவிட்டால் ரூ.1000 அபராதம் – அரசு உத்தரவு
இந்தியாவில் கடந்த ஆண்டு கொரோனா பாதிப்புகள் பரவலாக அதிகரிக்க தொடங்கிய பின்னர் நாட்டில் அதிகம் பாதிப்புகளை சந்தித்த மாநிலங்களின் வரிசையில் முதல் இடத்தில் மகாராஷ்டிரா இடம்பெற்றது. அங்குள்ள மும்பை, நாக்பூர், புனே உள்ளிட்ட நகரங்கள் அதிக பாதிப்புகளை எதிர்கொண்டன.
கடந்த சில நாட்களாக நாடு முழுவதும் வைரஸ் தொற்று உச்சம் பெற்று வருகிறது. இதில் மகாராஷ்டிராவில் மீண்டும் அதிக பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டு வருகின்றன. அங்கு மொத்த பாதிப்பு எண்ணிக்கை 25.64 லட்சம் என்ற எண்ணிக்கையை கடந்துள்ளது. இதனால் தடுப்பூசி போடும் பணிகள் உள்பட தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.
மகாராஷ்டிராவின் அவுரங்காபாத் மாவட்டத்தில் அதிகரித்து வரும் தொற்றால் வார விடுமுறை நாட்களில் முழு அடைப்பு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதேபோல், நாக்பூர் மாவட்டத்தில் கடந்த 15-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை ஒரு வார கால ஊரடங்கு உத்தரவு அமலானது. இவை தவிர அமராவதி, யவத்மல் மற்றும் லத்தூர் போன்ற மாவட்டங்களில் கட்டுப்பாடுகள் முன்பே விதிக்கப்பட்டு விட்டன.
தொற்று அதிகரிப்பினை முன்னிட்டு மகாராஷ்டிராவில் திரையரங்குகள், ஓட்டல்கள் மற்றும் உணவு விடுதிகள் ஆகியவை கொரோனா தொடர்புடைய வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என அரசு உத்தரவிட்டு உள்ளது.
இதேபோல், பண்டிகை கொண்டாட்டங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. வரும் 29-ம் தேதி ஹோலி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், மகாராஷ்டிராவின் நாக்பூர் நகரில் அதற்கு நகராட்சி நிர்வாகம் தடை விதித்துள்ளது.
இந்நிலையில், மகாராஷ்டிராவில் தொற்று அதிகரிப்புகளைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
அதன்படி, பொது இடங்களில் முக கவசம் அணியாமல் காணப்படும் எந்த நபருக்கும் ரூ.500 அபராதம் விதிக்கலாம். பொது இடங்களில் யாரேனும் எச்சில் துப்புவது கண்டறியப்பட்டால் அவர்களுக்கு ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும் என அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
பீச் மற்றும் பூந்தோட்டங்கள் உள்ளிட்ட பொது இடங்களை இரவு 8 மணி முதல் காலை 7 மணி வரை மூட உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. இந்த நடைமுறை இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வரும். இதனை மீறுபவர்கள் தலா ரூ.1,000 அபராதம் செலுத்த வேண்டும் எனவும் அரசு உத்தரவில் தெரிவித்துள்ள
