90 நாட்களில் வெளியே வந்து உங்களை சும்மா விட மாட்டோம் என்று மக்களை மிரட்டிய குற்றவாளிகளுக்கு 33 நாட்களில் தண்டனை வாங்கி கொடுத்த காவல்துறை
நாமக்கல் மாவட்டம், பரமத்தியில் உள்ள சேத்துக்கால் மாரியம்மன் கோவிலில் கடந்த 26/02/21 அன்று அதிகாலை 4.15 மணியளவில் முருகசூரியா என்ற முறுக்கு, ராஜ் என்ற சுரேந்தர், கருப்பசாமி என்ற முத்து ஆகிய மூவரும் கோவிலுக்குள் சென்று காவலாளி கனேசன் என்பவரை கட்டிப்போட்டு கொலை மிரட்டல் விட்டு, ராஜ் என்ற சுரேந்தரை காவலுக்கு வைத்து விட்டு முருகசூரியா, கருப்பசாமி ஆகியோர் கோவில் கருவறைப் பூட்டை உடைத்து உள்ளே சென்று கோவிலுக்கு சொந்தமான வெள்ளி தங்க நகைகளை திருடிக்கொண்டு வெளியே செல்லும் போது அவர்களை ஊர் பொதுமக்களே பிடித்து கட்டிவைத்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர், இதற்கிடையே அவர்கள் ஊர் மக்களுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர், 90 நாட்களில் நாங்கள் வெளியில் வந்து விடுவோம் அதன் பின் உங்களை சும்மா விடமாட்டோம் என மிரட்டல் விட்டனர், இவர்களை கைது செய்த காவல்துறையினர் இந்த கொடூரமான திருடர்களுக்கு கடுமையான சட்டப்பிரிவின் கீழ் காவல்துறையினர் 33 நாட்களிளேயே தண்டனை பெற்றுத்தந்தனர். பொதுமக்கள் காவல்துறையினரை வெகுவாக பாராட்டினர்.
