Police Department News

மதுரை மாவட்டம் அய்யமுத்தன்பட்டியில், தனக்கு குழந்தையில்லை என்ற ஏக்கத்தில் தூக்குப் போட்டு வாலிபர் தற்கொலை

மதுரை மாவட்டம் அய்யமுத்தன்பட்டியில், தனக்கு குழந்தையில்லை என்ற ஏக்கத்தில் தூக்குப் போட்டு வாலிபர் தற்கொலை

மதுரை மாவட்டம், கீழவளவு காவல்நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியான அய்யன்பட்டியில் வசித்து வருபவர் ராமன் மகன் சிவகுமார் வயது 35, கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன்பு இவருக்கும் சுகன்யா என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது, திருமணம் முடிந்த இருவரும் சந்தோசமாக வாழந்து வந்த நிலையில் இவர்களுக்கு குழந்தையில்லை என்ற ஏக்கம் ஏற்பட்டது, இதன் காரணமாக சிவகுமாருக்கு குடி பழக்கம் ஏற்பட்டு, குடிக்கு அடிமையானார், இந்த நிலையில் கடந்த 27/03/21 ம் தேதி அதிகாலை சுமார் 6 மணியளவில் வீட்டில் யாரும் இல்லாத சமயம் பார்த்து தனது ஓட்டு வீட்டில் தனக்குத்தானே சேலையினால் தூக்குப் போட்டு தற்கொலைக்கு முயற்ச்சித்துள்ளார், சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த சிவகுமாரை காப்பாற்றி வேலூர் அரசு மருத்துவமனையில் முதல் சிகிச்சைக்காக சேர்த்தனர் பின்பு மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவ மனையில் அனுமதித்தனர், சிகிச்சையிலிருந்த சிவகுமார் கடந்த 28/03/21 அன்று சிகிச்சை பலனில்லாமல் இறந்து விட்டார். இவரது இறப்பு சம்பந்தமாக கீழவளவு காவல்நிலைய சார்பு ஆய்வாளர் திரு.முருகராஜா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Leave a Reply

Your email address will not be published.