கொரோனா வழிகாட்டுமுறையிலான மாஸ்க் அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிக்காத நிறுவனங்களின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் மதுரை மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை
கொரோனா வழிகாட்டு முறையிலான மாஸ்க் அணிவது, மற்றும் தனிமனித இடைவெளியை கடைபிடிப்பது ஆகியவை கட்டாயம் தவறும் பட்சத்தில் கடைபிடிக்காத நிறுவனங்களின் மீது கடுமையான நடவடிக்கை பாயும் என மதுரை மாநகராட்சி ஆணையர் திரு.விசாகன் எச்சரித்துள்ளார். மாநகராட்சி பகுதிகளில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்க துவங்கியுள்ளதால் மக்கள் மாஸ்க் போட வேண்டும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும், என மதுரை மாநகராட்சி ஆணையர் திரு. விசாகன் அறிவுறுத்தியுள்ளார். மாநகராட்சியின் 31 சுகாதார நிலையங்களிலும் இலவசமாக தடுப்பூசி போடப்படுகிறது. இதனை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார். காய்ச்சல் தொடர்பான சந்தேகங்களுக்கு 8428425000 என்ற எண்ணிற்கு மாநகராட்சி கட்டுப்பாடு மையத்தை தொடர்பு கொள்ளலாம். கொரோனா வழிகாட்டு முறைகளை வணிக நிறுவனங்கள் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.