வாக்குச்சாவடி பாதுகாப்பு பணியில் 5,000 போலீசார்
கோவை மாவட்டத்தில் நாளை சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதற்காக வாக்கு எந்திரங்கள் சீலிடப்பட்ட பைகள் பாதுகாப்பாக தேர்தல் அதிகாரிகள் முன்னிலையில் எடுத்து வைக்கப்பட்டது. அதை துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் அதிகாரிகள் அந்தந்த வாக்குச் சாவடிக்கு அனுப்பிவைத்தனர். வாக்குச்சாவடி பாதுகாப்பு பணியில் 5,000 போலீசார் ஈடுபடுத்தப்பட உள்ளனர். கோவை மாவட்டத்தில் வாக்குச்சாவடி பாதுகாப்பு பணியில் 5,000 போலீசார் ஈடுபடுத்தப்பட உள்ளனர். கோவை மாவட்டத்தில் 4,477 வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ளன. இங்கே தேவையான இயந்திரங்கள் கட்டுப்பாட்டு கருவிகள் மற்றும் விவிபேட் கருவிகள் இன்று மதியம் சப்ளை செய்யப்பட்டது. சட்டமன்ற தொகுதிக்கு மண்டல வாரியாக வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டன. மேலும் இன்று காலை வாக்குச்சாவடி தலைமை அலுவலர் மற்றும் உதவி அலுவலர்களுக்கு பணி ஒதுக்கீடு ஆணை வழங்கப்பட்டது. யார் யாருக்கு எந்தெந்த வாக்குச்சாவடி என அவர்களுக்கான உத்தரவும் அளிக்கப்பட்டது. பணி ஒதுக்கீடு பெற்றவர்கள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி சென்று பொறுப்பேற்கவேண்டும். மதியம் முதல் நாளை வாக்குப்பதிவு முடிவு வரை வாக்குச்சாவடியில் இருக்க வேண்டும். இன்று இரவும் வாக்குச்சாவடியில் தங்கியிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு வாக்குச்சாவடியில் இன்று ஒரு போலீஸ்காரர் பாதுகாப்பு பணியில் இருப்பார். மாவட்ட அளவில் இன்று சுமார் 5,000 போலீசாரும் நாளை மாவட்ட அளவில் சுமார் 10 ஆயிரம் போலீசாரும் பணியில் இருப்பார்கள். மாவட்ட அளவில் இன்று முதல் தேர்தல் பிரிவினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளனர். மாவட்ட அளவில் 861 ஒரு பதட்டமான வாக்குச்சாவடிகள் உள்ளன என் வெப்கேமரா மீது வாக்குப்பதிவு விவரங்கள் கண்காணிக்கப்படும் என தேர்தல் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.