கல்குவாரி பகுதியான சென்னை சங்கர் நகர் பகுதியில் இருசக்கர வாகன திருடர்கள் பிடிப்பட்டனர்.
சங்கர் நகர் பகுதியில் இருசக்கர வாகனத்தை திருடிய பொழிச்சலூர் பகுதியைச் சேர்ந்த மதன்ராஜ் என்பவர் S6 சங்கர் நகர் காவல் குழுவினரால் கைது . 3.5 லட்சம் மதிப்புள்ள 5 இருசக்கர வாகனங்கள் குற்றவாளிகளிடமிருந்து கைப்பற்றப்பட்டது.(05.04.2021)
S-6 Sankar Nagar Police team nabbed Madhanraj of Pozhichalur for stolen a two wheeler in Sankar Nagar area. The team recovered 5 two wheelers from the accused worth about Rs. 3.5 lakhs.(05.04.2021)
சென்னை , பொழிச்சலூர் பகுதியைச் சேர்ந்த வின்சென்ட் எட்வின்ராஜ், வ/28 என்பவர் கடந்த 03.04.2021 அன்று இரவு அவரது வீட்டின் முன்பு நிறுத்தியிருந்த இருசக்கர வாகனத்தை யாரோ திருடிச் சென்ற சம்பவம் குறித்து வின்சென்ட் எட்வின்ராஜ் S6 சங்கர் நகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின் பேரில் , வழக்குப் பதிவு செய்யப்பட்டது. S6 சங்கர் நகர் காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் விசாரணை செய்து , இருசக்கர வாகனத்தை திருடிய மதன்ராஜ் , வ / 20 , பொழிச்சலூர் என்பவரை கைது செய்தனர் . அவரிடமிருந்து ரூ .3.5 லட்சம் மதிப்புள்ள 5 இருசக்கர வாகனங்கள் கைப்பற்றப்பட்டு, அவர்மீது நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.