மதுரை, பாலமேடு பகுதியில் பாம்பு கடித்து பெண் பலி, பாலமேடு போலீசார் விசாரணை
மதுரை மாவட்டம் பாலமேடு அருகே உள்ள கோணப்பட்டி பகுதியை சேர்ந்தவர் முருகன் இவரது மனைவி சுபத்ரா வயது 26/21, கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு சுபத்ரா மற்றும் முருகன் ஆகிய இருவரும் தங்களுக்கு சொந்தமான பண்ணையில் வேலை செய்து கொண்டிருந்த போது சுபத்ராவை கொடிய விஷப்பாம்பு கடித்துள்ளது. உடனடியாக அவரை மீட்டு அக்கம் பக்கத்தினர் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இரண்டு நாட்கள் சிகிச்சைக்கு பின் சிகிச்சை பலனலிக்காமல் சுபத்ரா பரிதாபமாக உயிரிழந்தார்.இவரது இறப்பு குறித்து பாலமேடு போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.