ஆர்.எஸ்.மங்கலம் சுகாதார கட்டிடத்தை முதன்மை செயலாளர் ஆய்வு செய்ய வேண்டும்-மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
ராமநாதபுரம் மாவட் டத்தை சேர்ந்த கலந்தர் ஆசிக் அகமது, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்த தாவது:-
ராமநாதபுரம் மாவட்டம், ஆர்.எஸ்.மங்கலம், சுற்று வட்டார கிராமத்தில் மக்கள் பயன் பெறும் வகையில் அங்கு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த சுகாதார நிலைய கட்டிடம் பலவீனமாக காணப்படுகிறது. மேற்கூரைகள் இடிந்து விழுகின்றன. எனவே சுகாதார நிலைய கட்டிடத் தினை இடித்து புதிய சுகாதார நிலையம் கட்ட உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கை ஏற்கனவே விசாரணை செய்த ஐகோர்ட்டு உத்தரவின் பேரில், அந்த கட்டிடத்தை ராமநாதபுரம் மாவட்ட முதன்மை நீதிபதி ஆய்வு செய்து, அந்த கட்டிடம் பலவீனமாக உள்ளது என ஐகோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்திருந்தார்.
இந்நிலையில் இந்த வழக்கில் நீதிபதிகள் வைத்தியநாதன், பரத சக்கர வர்த்தி ஆகியோர் பிறப்பித்த உத்தரவு வருமாறு:-
மிகவும் பழமையான சிதிலமடைந்த இதுபோன்ற கட்டிடங்களில் உயிருக்கு ஆபத்தான நிலையில் மக்கள் சிகிச்சை பெறுவது நினைத்து பார்க்க முடியாத ஒன்று. இந்தக் கட்டிடம் முழுமையாக சேதமடைந்து உள்ளது அறிக்கையிலுள்ள புகைப்படத்தில் பார்க்க முடிகிறது.
எனவே, சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளர் ஆர்.எஸ். மங்கலம் மருத்துவ மனைக்கு நேரில் சென்று ஆய்வு செய்து போர்க்கால அடிப்படையில் கட்டிடத்தை முழுமையாக இடித்து அப்புறப்படுத்தும் நடவடி க்கை எடுக்க வேண்டும். ஏனென்றால் இந்த கட்டி டத்தை பழுது பார்ப்பது என்பது பயனளிக்காத ஒன்றாக தெரிகிறது.
எனவே இந்த கட்டிடத்தில் செயல்படும் மேம்படுத்தப் பட்ட ஆரம்ப சுகாதார நிலத்தை உடனடி யாக பாதுகாப்பான வேறு கட்டி டத்திற்கு மாற்றி மருத்துவ சிகிச்சைகள் வழங்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் சுகாதாரத் துறை செயலாளர் ஆய்வு குறித்து விரிவான அறிக்கையை ஆகஸ்ட் மாதம் 7-ந் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.