ஶ்ரீவில்லிபுத்தூர் அருகே சிறுமியை பலாத்காரம் செய்த தந்தைக்கு சாகும் வரை சிறை.
ஶ்ரீவில்லிபுத்தூர், அருகே கொத்தங்குளத்தை சேர்ந்த கூலித் தொழிலாளி கடந்த 1/9/14 அன்று தனது 11 வயது மகளை பாலியல் பலாத்காரம் செய்தார். இது குறித்து ஶ்ரீவில்லிப்புத்தூர் அனைத்து மகளீர் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது இந்த புகாரின் பேரில் ஶ்ரீவில்லிப்புத்தூர் அனைத்து மகளீர் காவல் நிலையத்தார் வழக்கு பதிவு செய்து கூலி தொழிலாளியை கைது செய்தனர். மேலும் இந்த வழக்கு ஶ்ரீவில்லிப்புத்தூரில் உள்ள போக்சோ நீதி மன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கை நீதிபதி பரிமிளா விசாரணை செய்து, மகளை பலாத்காரம் செய்த தந்தைக்கு சாகும்வரை சிறைத்தண்டனையும் 35,000/− ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.