சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் திரு.மகேஷ்குமார் அகர்வால் இ.கா.ப அவர்கள் அனைத்து மாவட்டத்தை சார்ந்த காவல்துறை மூலமாக கொரோனா விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தி கொண்டிருக்கிறார்கள்.
இன்று 13. 4 .2021 காலை தியாகராய நகர் காவல் மாவட்ட inம் தியாகராய ரோடு டாக்டர் தாமஸ் ரோடு அருகில் உள்ள குடியிருப்பு பகுதியில் காவல்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் சென்னை பெருநகர காவல் ஆணையர் திரு மகேஷ்குமார் அகர்வால் இ.கா.ப.அவர்கள் அதிகாரிகளுடன் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பு விழிப்புணர்வு வழங்கினார். பொதுமக்களுக்கு முககவசங்கள் வழங்கியும் மற்றும் தொற்று கண்டறிதல் . தடுப்பூசி முகாம் துவக்கிவைத்தார். காவல்துறையினர் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி உடன் இணைந்து பொதுமக்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வில் கூடுதல் காவல் ஆணையர் (தெற்கு)டாக்டர். கண்ணன் இ.கா.ப. இணை ஆணையர் (தெற்கு)திருமதி லட்சுமி இ.கா.ப துணை ஆணையர்கள் திரு ஹரிஹரன் பிரசாத் இ.கா.ப. மருத்துவர் தீபா சக்தியன்.இ.கா.ப மற்றும் காவல் அதிகாரிகள் பெருநகர சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர். முக கவசம் அணிதல் . சமூக இடைவெளி கடைபிடிப்பதன் அவசியத்தையும் அடிக்கடி கைகளை கிருமிநாசினி அல்லது சோப்பு கொண்டு சுத்தம்செய்வதின் அவசியத்தையும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டிய அவசியத்தையும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வுகளை கலை நிகழ்ச்சிகள் மூலம் பகிர்ந்தார்கள்.