Police Department News

மனித உயிரை காக்கும் பொருட்டு கொரோனா விழிப்புணர்வு தரமணி காவல்துறை உதவி ஆணையர் மதிப்பிற்குரிய திரு.ரவி (சட்டம் ஒழுங்கு) அவர்கள் மூலமாக தரமணியில் நடைப்பெற்றது.

மனித உயிரை காக்கும் பொருட்டு கொரோனா விழிப்புணர்வு தரமணி காவல்துறை உதவி ஆணையர் மதிப்பிற்குரிய திரு.ரவி (சட்டம் ஒழுங்கு) அவர்கள் மூலமாக தரமணியில் நடைப்பெற்றது.

சென்னை பெருநகர காவல் ஆணையர் திரு மகேஷ்குமார் அகர்வால் இ.கா.ப அவர்கள் உத்தரவின் படி தெற்கு மண்டல மாவட்ட காவல்துறை தரமணி காவல்நிலையம் சார்பாக 13.04.2021 மாலை பெருங்குடி மற்றும் தரமணி‌சந்திப்பு சாலையில் உதவி ஆணையர் திரு.ரவி அவர்கள் ஒவ்வொரு குடும்பத்திற்கும் உயிர் எவ்வளவு முக்கியம் என்பதை உணரும் வகையில் தன்னுடைய அனுபவத்தின் வாயிலாக பாதசாரிகள் , ஆட்டோ ஓட்டுனர், சிறியவர், பெரியோர் , இரு சக்கர வாகன ஓட்டிகள் ,நான்கு சக்கர வாகன ஓட்டிகள்,பேருந்திக்காக நின்றிருப்போர் மற்றும் வணிக வளாகம் , பூ வியாபாரம் செய்வோர் சிறு வியாபாரிகள் ஆகிய அனைவருக்கும் கொரோனாவை தடுக்கும் வாசகங்கள் அடங்கிய கைபிரதிகள் வழங்கப்பட்டது மற்றும் ஒலிபெருக்கி மூலமாக கண்டிப்பாக கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளவேண்டும் என்றும் , சமூக இடைவெளி ,முக கவசம்,சானிடைசர் பயன் படுத்தவேண்டும் என்றும் காரணமின்றி வெளியே வரகூடாது என்றும் மருத்துவர் ஆலோசனை படி நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க ZINC மாத்திரை எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் மக்கள் பயன்பெறும் வகையில் கொரோனா விழிப்புணர்வை ஏற்ப்படுத்தினார்.இந்நிகழ்ச்சியில் காவல்துறை ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் ஆகிய அனைவரும் கலந்து கொண்டனர்.இப்படிபட்ட செயல்களை காவல்துறையினர் மக்களுக்கு சேவை என்று கருதாமல் தியாகமாக செய்து வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published.