Police Department News

காவல் துறையில், ஆயுதப்படை என்றால் என்ன?

காவல் துறையில், ஆயுதப்படை என்றால் என்ன?

தமிழ்நாட்டில் மாவட்ட தலைநகரங்களில் எஸ்பி கட்டுபாட்டின் கீழ் ஆயுதப்படை செயல்பட்டு வருகிறது. சென்னை, கோவை, நெல்லை, வேலூர், திருச்சி, பழனி, மதுரை ஆகிய இடங்களில் பட்டாலியன்கள் எனப்படும் தமிழ்நாடு சிறப்பு காவல்படையும் செயல்பட்டு வருகிறது.

இரண்டாம் நிலை காவலர்களாக தேர்வு செய்யப்படும் காவலர்கள் முதலில் தமிழ்நாடு சிறப்பு காவல் படையில் பணியமர்த்தப்படுகிறார்கள் . பெரிய அளவிலான சட்டம், ஒழுங்கு பாதுகாப்பு பணிகளுக்காக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள்.

இப்படி 16 சிறப்பு காவல் படை உள்ளது. இதில், 8-ம் அணி டெல்லி திகார் சிறையில் உள்ளது. 6 மாதத்துக்கு ஒரு முறை வெவ்வேறு மாவட்டங்களுக்கு நாடோடி போல் அலைகிறார்கள் . சில ஆண்டுகளுக்கு பிறகு அங்கிருந்து ஆயுதப்படை பிரிவுக்கு மாற்றப்படுகிறார்கள்.

முதல்வர், நீதிபதிகள், வங்கிகள், விஐபிக்களுக்கு பாதுகாப்பு வழங்குவது முக்கிய பணி. குற்றவாளிகளை நீதிமன்றங்களுக்கும் சிறைச்சாலைக்கும் அழைத்துச் செல்கிறார்கள். கொலை, கொள்ளை நடந்தாலும் பாதுகாப்புக்காக போலீஸ் அதிகாரிகள் ஆயுதப்படை பிரிவு காவலர்களைத்தான் முதலில் அனுப்பி வைப்பார்கள்.

பிடித்த ஆயுதப்பிரிவு காவலர்களுக்கு எளிமையான பணியும், பிடிக்காத காவலர்களுக்கு கடினமான பணியும் சில நேரங்களில் ஒதுங்கப்படுகிறது. பெண் காவலர்களுக்கும் இதே நிலைதான். அவர்களுக்கு பணியின்போது முறையான கழிப்பிட வசதிகூட செய்து கொடுப்பது இல்லை என்று குற்றச்சாட்டும் உள்ளது.

சில நேரங்களில் 4 மணி நேரம் வேலை, 8 மணி நேரம் ஓய்வு என்று கூட பணி இருக்கும். ஓய்வு அதிக நேரமிருந்தாலும் இதை குடும்பத்தார், நண்பர்களுடன் உபயோகம் உள்ளதாக செலவழிக்க முடியாது. மொத்தமாக வேலை வாங்கி விட்டு ஒரு குறிப்பிட்ட நேரத்தை ஓய்வுக்காக மொத்தமாக மாற்றி அமைக்க வேண்டும்.

மேலும் வார விடுப்பு கிடையாது. விடுப்பு எடுப்பதும் எளிதான காரியம் அல்ல. எனவே வார ஓய்வு, எல்லோருக்கும் சமமான பணி, பயன்படும் வகையில் பணி ஓய்வு வழங்க வேண்டும் என்று கோரிக்கைகள் உள்ளது.

ஆனால் உயரதிகாரிகள் கூறும்போது,

“சென்னையில் 6,500 ஆயுதப்பிரிவு காவலர்கள் உள்ளனர். இவர்களில் 1500 பேர் பெண்கள். அனைவருக்கும் சமமான பணி ஒதுக்கப்படுகிறது.

மன அழுத்தம் குறைப்பதற்கு வாரந்தோறும் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. யாருக்கேனும் குறை இருந்தால் எங்களிடம் வாய்மொழியாகவும் எழுத்து பூர்வமாகவும் தெரிவிக்கலாம். டிஜிபியிடம் நேரடியாகவும் புகார் தெரிவிக்கலாம்” என்று கூறியுள்ளார்கள்.

Leave a Reply

Your email address will not be published.