வித்தியாசமான முறையில் கொரோனா விழிப்புணர்வு J9 துரைப்பாக்கம் போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் திரு .வெங்கடேசன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இன்று மாலை 21.04.2020 மனிதன் விதியை மதியால் வெல்ல முடியும் என்ற புதிய நோக்கில் துரைப்பாக்கம் போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் திரு.வெங்கடேசன் அவர்கள் காவல் குழுவினருடன் இணைந்து கொரோனா விழிப்புணர்வை துண்டு பிரசுரங்களை கொண்டு துரைப்பாக்கம் பகுதியில் உள்ள ஒவ்வொரு கடை உரிமையாளர் மற்றும் அங்கு பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் வடமாநில தொழிலாளர்கள்
Shop Lists
(cell phone shop,Fast food ,Hotel ,Yes Shop ,Mechanic shop pvr mall industrial company Fruit shop Vegitable shop )
ஆகிய அனைவருக்கும் கொடுத்தும் அதுமட்டுமின்றி அந்தந்த கடை உரிமையாளரிடம் நீங்கள் இதைபடித்துபயன்பெறும் வகையில் மற்றவர்களும் பயன்படும் படியாக உங்கள் கடை பெயரை பதிவு செய்து வரும் வாடிக்கையாளர்களுக்கு நீங்கள் இந்த துண்டு பிரசுரத்தை அச்சடித்து கொடுத்தால் மனித உயிரை உங்களாலும் காப்பாற்ற முடியும் என்றும் கொரோனாபரவுதலை தடுக்கமுடியும் என்றும் அதன்பிறகு ஒவ்வொருவரும் கட்டாயமாக தடுப்பூசிபோட்டு கொள்ளவேண்டும் என்றும் அரசாங்க விதிமுறைகளை அனைவரும் கடைபிடிக்க வேண்டும் என்றும் மிகசிறந்த முறையில் கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தினார் துரைப்பாக்கம் போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் திரு.வெங்கடேசன் அவர்கள் ஒவ்வொரு கடை உரிமையாளரும் காவல்துறையினரை பாராட்டினர்.