கொலை, கொள்ளை வழக்குகளில் சிறப்பாக துப்பு துலக்கிய காவலர்களுக்கு திருச்சி மாநகர காவல் ஆணையாளர் அவர்கள் பாராட்டு
திருச்சி, கரூர் பைபாஸ் சாலையில் உள்ள பிரபல நகை கடையில் ஊழியராக பணியாற்றிய மார்ட்டின்ஜெயராஜ் என்பவர், கடந்த 8 ம் தேதி சென்னையில் நகை வாங்கிக் கொண்டு காரில் வந்த போது கொலை செய்யப்பட்டு அவர் வைத்திருந்த ஒன்னரை கிலோ தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. இந்த வழக்கில் உறையூர் குற்றப்பிரிவு சார்பு ஆய்வாளர் உமாசங்கரி, சிறப்பு சார்பு ஆய்வாளர் மாதவன், தலைமை காவலர்கள் செபஸ்டின், விஜயராஜ், ஆகியோர் கொண்ட தனிப்படையினர் சிறப்பாக துப்பு துலங்கி குற்றவாளிகளை 12 மணி நேரத்தில் கைது செய்து நகைகளை மீட்டனர். இதே போல கடந்த 9 ம் தேதி திருச்சி பீமநகர் மெயின் ரோட்டில் வக்கில் கோபிகண்ணன் என்பவர் வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் செசன்ஸ் கோர்ட் காவல் சார்பு ஆய்வாளர் கருணாகரன், சிறப்பு சார்பு ஆய்வாளர் அந்தோனி செல்வம், தலைமை காவலர்கள் சரவணன், ஜானி, இனுஸ்டர், கெல்லர், ஜேக்கப், தனசேகரன், செளகத்அலி, ஆகியோர் கொலையாளிகளை 24 மணி நேரத்தில் கைது செய்தனர். இந்த 2 வழக்குகளிலும் சிறப்பாக துப்பு துலங்கி குற்றவாளிகளை விரைவாக கைது செய்த போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீசார் அனைவரையும் திருச்சி மாநகர காவல் ஆணையாளர் திரு. அருண் நேற்று நேரில் வரவழைத்து பாராட்டி அவர்களுக்கு பணி பாராட்டு சான்றிதழ் மற்றும் பண வெகுமதிகளை வழங்கினார்.