மதுரை மாவட்டம் மேலூர் அருகே, 300 மது பாட்டில்களுடன் ஒருவர் கைது, கார் பறிமுதல், மேலூர் போலீசாரின் அதிரடி வேட்டை
கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு அமலில் உள்ளதால் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி மது பாட்டில்களை கூடுதல் விலைக்கு விற்கும் நோக்கத்துடன் பலர் மது பாட்டில்களை பதுக்கி வைத்துள்ளனர். மேலூர் காவல் துணை கண்காணிப்பாளர் திரு. ரகுபதி ராஜா, மற்றும் காவல் ஆய்வாளர் திரு. சார்லஸ் தலைமையில் போலீசார் பதுக்கல்காரர்களை தேடிப் பிடித்து கைது செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் எம். மலம்பட்டியில் நாகராஜன் வயது 55/21, என்பவர் விற்பனைக்காக காரின் உள்ளே வைத்திருந்த 300 மது பாட்டில்களையும் போலீசார் கைபற்றி அவரை கைது செய்தனர். மேலும் காரையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






