தேனி மாவட்டத்தை சேர்ந்த முகக்கவசம் அணியாத போலீஸ்காரருக்கு அபராதம் விதித்த காவல் கண்காணிப்பாளர்
தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.E.சாய் சரண்தேஜஸ்வி அவர்கள் காவல் துறையினரின் வாகனத் தனிக்கையை ஆய்வு செய்து கொண்டிருந்த போது முகக்கவசம் அணியாமல் இரு சக்கர வாகனத்தில் வந்த காவலருக்கு ரூ. 200/− அபராதம் விதித்தார்.
கண்டமனுரை சேர்ந்தவர் ரஞ்சித், இவர் தேனி காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கொரோனா கட்டுப்பாட்டு அறையில் பணிபுரிகிறார். நேற்று முன் தினம் இவர் வீட்டிலிருந்து இருசக்கர வாகனத்தில் ஹெல்மட் அணிந்து அலுவலகம் வந்தார். அரண்மனை புதூர் விலக்கு அருகே காவல் கண்காணிப்பாளர் ஊரடங்கில் பொதுமக்கள் நடமாட்டம் குறித்து ஆய்வு செய்து வந்தார். முகக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தில் ரஞ்சித் வந்ததை பார்த்து, அவருக்கு ரூ. 200/− அபராதம் விதிக்க உத்தரவிட்டார். தான் அணிந்திருந்த முகக்கவசத்தில் கயறு அறுந்ததால் முகக்கவசம் அணியாமல் வந்ததாக ரஞ்சித் கூறினார். இருப்பினும் போலீசார் அபராதம் விதித்தனர்.