மதுரை செல்லூர் பகுதியில் ஊரடங்கை மீறி வாகனத்தில் ஊர் சுற்றியவர் மீது வழக்கு
மதுரை டவுன் செல்லூர் D2, காவல்நிலைய சார்பு ஆய்வாளர் திரு. ஜான் அவர்கள் கொரோனா வைரஸ் நோய் தடுப்பு, மற்றும் அரசு அறித்த ஊரடங்கு விதிமுறைகளை அமல் படுத்தும் நோக்கில் செல்லூர், பாலம் ஸ்டேஷன் ரோட்டில் எல்.ஐ.சி., குலமங்கலம் ரோடு சந்திப்பில் வாகன சோதனையில், ஈடுபட்டுக் கொண்டிருந்த சமயம் அவ்வழியாக மதுரை, வில்லாபுரத்தை சேர்ந்த மாயழகு மகன் மணிகண்டன் இரு சக்கர வாகனத்தில் எந்தவித அத்தியாவசிய காரணமும் இன்றி சுற்றித் திரிந்தவரை பிடித்து விசாரித்து, ஊரடங்கு விதிமுறைகளை மீறியதால் அவர் மீது சார்பு ஆய்வாளர் ஜான் அவர்கள் வழக்கு பதிவு செய்தார்.