விருதுநகர் மாவட்டம்:-
அருப்புக்கோட்டையில் மாற்றுத்திறனாளி களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மனோகரன் அரிசி பருப்பு மளிகை பொருட்களை கொரோனா நிவாரணமாக வழங்கினார்.
விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக மனோகரன் கடந்த ஏழாம் தேதி பொறுப்பேற்றுக்கொண்டார்.
கண்காணிப்பாளராக பொறுப்பேற்று கொண்டதில் இருந்தே மாவட்டத்தில் ஊரடங்கால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கி வருகிறார்.
இந்நிலையில் முதன் முறையாக அருப்புக்கோட்டைக்கு வந்த காவல் கண்காணிப்பாளர் மனோகரன் சின்னபுளியம்பட்டி பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
ஊரடங்கால் வாழ்வாதரம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு அரிசி பருப்பு கோதுமை மாவு மளிகை உள்ளிட்ட 14 பொருட்களை கொரோனா நிவாரணமாக வழங்கினார்.
இந்த நிகழ்சியில் தனிமனித இடைவெளியோடு அமர வைக்கப்பட்டிருந்த மாற்றுத்திறனாளிகளுக்கு அமர்ந்திருந்த இடத்திற்கே சென்று நிவாரணப்பொருட்களை மனோகரன் வழங்கினார்.
மேலும் ஒருசில மாற்றுத்திறனாளி களின் வீடுகளுக்கே தேடிச்சென்று நிவாரணப்பொருட்களை வழங்கினார்.
மாறுத்திறனாளிகள் சங்க மாவட்ட செயலாளர் சிவக்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் துணை காவல் கண்காணிப்பாளர் திரு.சகாயஜோஸ் நகர் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் திருமதி.ராஜபுஷ்பா சார்பு ஆய்வாளர் திரு.முத்துக்குமார் மற்றும் முன்னாள் நகராட்சி சேர்மன் திரு.சிவப்பிரகாசம் திமுக மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பாபுஜி திமுக நகரச்செயலாளர் மணி உள்ளிடோர் பலரும் கலந்து கொண்டனர்.