மனித நேயமிக்க மதுரை செல்லூர் காவல் ஆய்வாளர்
கொரோனா நோய் தொற்று தடுப்பு நடவடிக்கையாக அரசு ஊரடங்கை அமல் படுத்தியுள்ள நிலையில் மதுரை செல்லூர் D2, காவல்நிலைய ஆய்வாளர் திரு. அழகர் அவர்கள் பொது மக்களுக்கு கொரோனா நோய் தொற்று பற்றி போதிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்தார் மேலும் இலவசமாக முகக் கவசம், கபசுரக்குடிநீர் வழங்கி ஏழை எளிய மக்கள் மற்றும் ஊரடங்கால் வாழ்வாதரம் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு மதிய உணவும் வழங்கி வந்தார், முன்களப்பணியாளர்களான காவல்துறையினர்களின்
ஆரோக்கியத்தையும் பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு தன்னுடைய நிலையத்தில் பணிபுரியும் அனைத்து காவலர்களுக்கும் நோய் தடுப்புக்கான , கிரிமி நாசினி, சானிடைசர் மற்றும் முகக் கவசம் ஆகியவைகளை வழங்கினர், மேலும் ஆதரவற்றோருக்கு உதவி வரும் சூழ்நிலையில் மதுரை செல்லூர் அய்யனார் கோவில் 5 வது தெருவில் குடியிருந்து வரும் முத்துகிருஷ்ணன் மகன் ராமசாமி வயது 78/21, மற்றும் அவரது மனைவி பூபதி ஆகியோர் இவர்களுக்கு குழந்தைகள் இல்லாத காரணத்தாலும் வயது மூப்பு காரணத்தாலும் எந்த வித வருமானம் இல்லா நிலையில் இவர்களது வாழ்வாதரம் பாதிபடைந்தது. இவர்களுக்கு மனிதநேயத்தோடு இவர்களை ஆதரவற்ற முதியோர்களுக்கு உதவும் இதயம் அறக்கட்டளையில் சேர்த்து அவர்களுக்கு உதவியுள்ளார். இந்த நிகழ்வை பொதுமக்கள் அனைவரும் பாராட்டினர்.