ஊரடங்கு சமயத்தில் சட்ட ஒழுங்கு, மற்றும் குற்ற நடவடிக்கைகளை கட்டுப்படுத்த காவல் கண்காணிப்பாளரின் அதிரடி நடவடிக்கைகள்
ஈரோடு மாவட்டத்தில் கடந்த 10 நாட்களில் லாட்டரி மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்த 202 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து ஒன்னே முக்கால் லட்சம் ரூயாய் பறிமுதல் செய்துள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தில் ஊரடங்கு காலத்தில் சட்ட விரோத செயல்களை கட்டுப்படுத்தும் வகையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. சசிமோகன் அவர்கள் உத்தரவின்படி மாவட்டம் முழுவதும் போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இதில் கடந்த 7 ம் தேதி முதல் 17 ம் தேதி வரையிலான 10 நாட்களில் மாவட்டம் முழுவதும் நடத்திய சோதனையில் சட்ட விரோத லாட்டரி விற்பனை, கஞ்சா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பனை மற்றும் சூதாட்டத்தில் ஈடுபட்டோர் மீது 47 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 202 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து வெளிமாநில லாட்டரி சீட்டுக்கள் 25, கஞ்சா 21 அரை கிலோ, தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் ஒன்னரை டன் , 8 சேவல்கள், மற்றும் ஒரு லட்சத்தி 75 ஆயிரத்து 880 பறி முதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் இரு சக்கர வாகனங்கள் , நான்கு சக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டு அந்த வாகனங்களை அரசுடமை ஆக்கப்பட உள்ளன.