பணி நிரந்தரம் செய்யக்கோரி ஊர்க்காவல் படையினர் எம்.எல்.ஏ.,யிடம் மனு அளித்தனர்
கள்ளகுறிச்சியில் ஊர்க் காவல் படை வீரர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்யவும் கொரோனா தொற்றால் உயிர் இழந்தவர்களுக்கு நிவாரணம் பெற்றுத் தர கோரியும் எம்.எல்.ஏ., விடம் மனுக் கொடுத்தனர்.
கள்ளக்குறிச்சி ஊர்க்காவல் படை வீரர்கள் சார்பில் ஏ பிரிவு படை வீரர் சரவணன் எம்.எல்.ஏ., செந்தில்குமார் அவர்களிடம் மனு அளித்துள்ளார்.
தமிழக காவல்துறையில் ஒரு பகுதியாக செயல்பட்டுவரும் ஊர் காவல் படையில் 16 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பணி புரிகின்றனர். அவர்களுக்கு மாதத்திற்கு ஐந்து நாட்கள் பணி என்ற அளவில் மட்டுமே பணி வழங்கப்படுகிறது. நாளொன்றுக்கு 560 ரூபாய் வீதம் மாதம் 2800 ரூபாய் மட்டுமே பெற்று வருகிறார்கள். இந்த சொற்ப்ப ஊதியத்தை கொண்டு அவர்கள் குடும்பத்தை நடத்த முடியவில்லை, அத்துடன் கொரோனா பரவல் காலத்தில் போலீசாருக்கு சமமாக அனைத்து பணிகளிலும் ஈடுபட்டு வரும் நிலையில் அவர்கள் இறக்க நேரிட்டால் நிவாரனம் வழங்கப்படுவதில்லை எனவே அவர்களின் கோரிக்கையை சட்டசபை கூட்டத்தொடரில் வலியுறுத்தி ஊர் காவல் படையினரின் வாழ்க்கை தரத்தை உயர்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.