வா பாப்பா விளையாடலாம்” வாலிபரின் செயல்.. பெற்றோரின் பரபரப்பு புகார்.. காவல்துறையினரின் அதிரிடி நடவடிக்கை..!!!
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்துள்ளனர்.
தென்காசி மாவட்டத்திலுள்ள வாசுதேவநல்லூர் பகுதியில் குருசாமி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு மகேந்திரன் என்ற மகன் இருக்கின்றார். இவர் அதே பகுதியில் வசிக்கும் ஒரு சிறுமியுடன் தினமும் விளையாடுவது வழக்கம். இந்நிலையில் மகேந்திரன் அந்த சிறுமியை விளையாடுவதற்காக அழைத்துச் சென்று திடீரென பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.
இதனையடுத்து அந்த சிறுமி அழுது கொண்டே நடந்த சம்பவங்கள் அனைத்தையும் தனது பெற்றோரிடம் தெரிவித்தார். இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் உடனடியாக அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.
அந்த புகாரின்படி போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்த காவல்துறையினர் உடனடியாக மகேந்திரன் கைது செய்து சிறையில் அடைத்து விட்டனர்.