Police Department News

மதுரை மாநகர நுண்ணறிவுப் பிரிவு காவல் உதவி ஆணையர் சிவக்குமார் பணியிடமாற்றம் ஏன்?

மதுரை மாநகர நுண்ணறிவுப் பிரிவு காவல் உதவி ஆணையர் சிவக்குமார் பணியிடமாற்றம் ஏன்?

மதுரை மாநகர காவல் நுண்ணறிவு பிரிவு உதவி ஆணையர் எஸ்.சிவக்குமார் திண்டுக்கலுக்கு மாற்றப்பட்டார்.

இதற்கான உத்தரவை தமிழக டிஜிபி சைலேந்திரபாபு பிறப்பித்துள்ளார். அவருக்குப் பதிலாக சிறப்பு புலனாய்வு பிரிவு உதவி ஆணையர் ராமலிங்கம், பொறுப்பு உதவி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மதுரை நகர் நுண்ணறிவு பிரிவு காவல் உதவி ஆணையராக பணி புரிந்தவர் சிவக்குமார். சிவகங்கையில் பணிபுரிந்த இவர், மதுரை அண்ணாநகர், தெற்குவாசல் காவல் நிலையங்களில் ஆய்வாளராகப் பணியாற்றினார்.

2015ல் மதுரை மாநகர நுண்ணறிவு பிரிவு ஆய்வாளராக நியமிக்கப்பட்டார். இதன்பின்னர் ,காவல் உதவி ஆணையராக பதவி உயர்வு பெற்ற அவர், அப்பிரிவில் உதவி ஆணையராக 2018 பிப்ரவரியில் நியமிக்கப்பட்டார்.
அதிமுக ஆட்சியை தொடர்ந்து திமுக ஆட்சிக்கு வந்தபின், தொடர்ந்து ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் படிப்படியாக இடமாற்றம் செய்யப்படும் சூழலில், மாநகர நுண்ணறிவு , எஸ்பி தனிப்பிரிவு அதிகாரிகளும் இடமாற்றம் செய்யப்படுகின்றனர்.

இதன்படி, மதுரை நுண்ணறிவு பிரிவு காவல் உதவி ஆணையர் சிவக்குமார் இடமாற்றம் செய்யப்பட்டு, திண்டுக்கல் பொருளாதார பிரிவு துணை காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டார். இவருக்குப் பதிலாக மதுரையில் பணிபுரியும் சிறப்பு புலனாய்வுப் பிரிவு (எஸ்ஐசி) உதவி ஆணையர் ராமலிங்கம் நுண்ணறிவு பிரிவு உதவி ஆணையராக தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஏற்கெனவே, இவர் மதுரையில் உளவுத்துறையில் ஆய்வாளராக பணிபுரிந்து, டிஎஸ்பியாக பதவி உதவி பெற்றபின், மதுரை அண்ணாநகர், திருப்பரங்குன்றத்தில் உதவி ஆணையராக பணியாற்றியுள்ளார்.

இன்னும் ஓரிரு நாளில் நுண்ணறிவு பிரிவுக்கு நிரந்தர உதவி ஆணையர் நியமிக்கப்படலாம் என, தெரிகிறது. இதற்கிடையில், ஏற்கனவே நுண்ணறிவு பிரிவு காவல் ஆய்வாளர், உதவி ஆணையர் என, சுமார் 7 ஆண்டாக ஒரே இடத்தில் பணி புரிந்தாலும், உதவி ஆணையராக 3 ஆண்டை தாண்டியதால் சிவகுமார் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார் என்றும் நிர்வாக ரீதியான மாறுதலே தவிர வேறு காரணமில்லை எனவும் காவல்துறை வட்டாரம் தெரிவிக்கிறது.

Leave a Reply

Your email address will not be published.