மதுரை செல்லூர் பகுதியில் பீரோவிலிருந்த பணம் மாயம், செல்லூர் போலீசார் விசாரணை
மதுரை மாநகர் செல்லூர் D2, காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான செல்லூர் அஹிம்சாபுரம் 5 வது தெரு விசாலம் அமராவதி காம்பவுண்டில் குடியிருக்கும் அம்பலவாணன் மகன் முருகேசன் வயது 53/21, இவரது மனைவி பாஞ்சாலி, இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் மூத்த மகள் நாகலெக்ஷிமி தன் கணவருடன் முடக்காத்தானில் வசித்து வருகிறார். மகன் முத்துமாரியப்பன் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவர் மதுரை பைபாஸ் ரோட்டில் கிடியோன் ராஜ் என்பவருக்கு சொந்தமான டிரைடிங் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி குறிஞ்சி நகரில் வீட்டு வேலை பார்த்து வருகிறார். இவர்கள் இருவரும் தினசரி காலை 6.30 மணிக்கு வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்று விடுவார்கள். அதே போல் கடந்த 21 ம் தேதி காலையில் 6.30 மணிக்கு வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்றவர்கள் மதியம் 12.30 மணிக்கு வீடு திரும்பினர், அப்போது தன் வீட்டு கதவு திறந்து இருந்தது உள்ளே சென்று பார்த்தபோது பீரோ திறந்திருந்தது துணிகள் சிதறிக் கிடந்தன், பீரோவின் உள் லாக்கர் உடைக்கப்பட்டிருந்தது, அதனுள் இருந்த ரூபாய் 4000 பணம் காணவில்லை தன் மனைவிக்கு தகவல் கொடுத்து அவரும் வந்து வீடு முழுவதும் தேடி பார்த்து கிடைக்கவில்லை எனவே செல்லூர் காவல்நிலையத்தில் வந்து திருடு போன தங்களது பணம் 4000 த்தை கண்டுபிடித்து தரும்படி புகார் கொடுத்தனர் புகாரை பெற்றுக்கொண்ட ஆய்வாளர் திருமதி வேதவள்ளி அவர்கள் உத்தரவின்படி சார்பு ஆய்வாளர் திரு. கிருஷ்ணமூர்த்தி அவர்கள் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.