Police Recruitment

குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு -321 – Withdrawal of Prosecution

குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு -321 – Withdrawal of Prosecution

நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள வழக்கை காவல் ஆய்வாளர் குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு – 321 ன் கீழ் மனுதாக்கல் செய்து அந்த வழக்கை திரும்ப பெற முடியாது. ஒரு குற்ற வழக்கை Withdrawal செய்வதற்கு காவல் ஆய்வாளருக்கு எந்த அதிகாரத்தையும் குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு – 321 வழங்கவில்லை. அதனால் வழக்கை திரும்ப பெற காவல் ஆய்வாளர் மனுதாக்கல் செய்ய முடியாது. ஒரு குற்றவியல் வழக்கை நீதிமன்றத்தில் நடத்தி வரும் அரசு வழக்கறிஞர் அல்லது உதவி அரசு வழக்கறிஞர் மட்டுமே நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள வழக்கை திரும்ப பெறுவது குறித்து தீர்மானிக்க முடியும். அதேசமயம் அரசு வழக்கறிஞர் தன் இஷ்டத்திற்கு எந்த காரணமும் இல்லாமல் வழக்கை திரும்ப பெற முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது. CRL. OP. NO – 4430/2012 P. Ponnaiyan Vs Inspector of police, Chithodu police station, Erode (2012-1-LW-CRL-529)

Leave a Reply

Your email address will not be published.