
மதுரை ஜெய்ஹிந்துபுரம் பகுதியில் கத்தியை காட்டி மிட்டி வழிப்பறி செய்த இரண்டு வாலிபர்களை கைது செய்த ஜெய்ஹிந்துபுர போலீசார்
மதுரை, ஜெய்ஹிந்துபுரம் B6, காவல்நிலையம் சரகத்திற்குட்பட்ட பகுதியான ஜெய்ஹிந்துபுரம் ராமையா தெருவில் வசிக்கும் பஞ்சாரம் மகன் ராமமூர்த்தி வயது, 46/21, இவர் தச்சு வேலை செய்து வருகிறார். இவர் கடந்த 1 ம் தேதியன்று மதியம் 1.15 மணியளவில் தன் சொந்த வேலை காரணமாக ஜெய்ஹிந்துபுரம், பாண்டியராஜன் தெருவில் அண்ணா முக்கிய வீதி சந்திப்பில் நின்று கொண்டிருந்தார், அப்போது அந்த வழியாக வந்த இரு வாலிபர்கள் இவரிடம் கத்தியை காட்டி மிரட்டி அவர் வைத்திருந்த 300/− ரூபாயை வழிப் பறிசெய்து கொண்டு ஓடி விட்டார் உடனே இவர் ஜெய்ஹிந்துபுரம் B6, காவல் நிலையத்தில் புகார் அளித்தார், புகாரை பெற்றுக் கொண்ட காவல் ஆய்வாளர் திரு. கதீர்வேல் அவர்கள் மேற்படி இரு நபர்களையும் பிடித்து விசாரித்ததில் அவர்கள். ராமநாதபுரம், எடிவிளக்கியை சேர்ந்த தங்கவேலு மகன் முத்துராமலிங்கம் என்ற குரங்கு முத்துராமலிங்கம் என்ற குரங்கு முத்தராமலிங்கம் வயது 46/21, அவனியாபுரம், நீலமேகம் மகன் காளீஸ்வரன்,31/21, என தெரிய வந்தது. அதன்பின் ஆய்வாளர் அவர்களிடமிருந்து உத்தரவின் பேரில் சார்பு ஆய்வாளர் திரு. சோம சுந்தரம் இவர் மீது வழக்கு பதிவு செய்து எதிரியை கைது செய்து நீதி மன்றத்தில் ஆஜர் படுத்தி, நீதிபதியின் உத்தரவின்படி சிறையில் அடைத்தனர்.




