மதுரை விளாச்சேரியில் மனநிலை பாதிக்கப்பட்ட நபர் தனக்குதானே தூக்கிட்டு தற்கொலை, திருநகர் போலீசார் விசாரணை
மதுரை, திருநகர் W1, காவல்நிலையம் எல்லைக்குட்பட்ட பகுதியான விளாச்சேரி மொட்டமலை, கலைஞர் நகரில் வசித்து வருபவர் மகேந்திரன் மனைவி ஐஸ்வர்யா வயது 22/21, இவருக்கும் இவரது கணவர் மகேந்திரனுக்கும் கருத்துவேறுபாடு காரணமாக இவர் தனது தாய் வீட்டில் வசித்து வந்தார், இவரது கணவருக்கு சற்று மனநிலை சரியில்லாமல் இருந்து வந்த நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன் இவரது தாய் இறந்து விட்டதாக கூறிக் கொண்டே அவர் பற்றி அடிக்கடி சொல்லி கொண்டே இருந்துள்ளார். மிகுந்த மன வறுத்தத்தில் இருந்துள்ளார் இந்த நிலையில் கடந்த 3 ம் தேதி மாலை 5 மணியளவில் ஐஸ்வர்யா தனது தாய் வீட்டிலிருந்த போது அவரது நாத்தனார் அவருக்கு போன் செய்து உனது கணவர் ரூமில் உள்பக்கமாக தாள் போட்டுக்கொண்டு உள்ளார் என கூற உடனை வீட்டிற்கு சென்று கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது அங்கே பேன் மாட்டும் கொண்டியில் சேலையால் தனக்கு தானே தூக்கிட்டு தொங்கியுள்ளார் உடனை ஐஸ்வர்யா காவல் நிலையத்தில் புகார் செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க கெட்டுக்கொண்டார், புகாரின் அடிப்படையில் சார்பு ஆய்வாளர் திரு, ராஜ்குமார் அவர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.