Police Department News

எந்தவொரு மனிதரையும் கட்டாயப்படுத்தி வேலைகளை செய்ய வைப்பது சட்டப்படி தண்டனைக்குரியது -சிறப்பு நீதிமன்றத்தின் நீதிபதி மலர்விழி;

எந்தவொரு மனிதரையும் கட்டாயப்படுத்தி வேலைகளை செய்ய வைப்பது சட்டப்படி தண்டனைக்குரியது -சிறப்பு நீதிமன்றத்தின் நீதிபதி மலர்விழி;

பெரம்பலூர் – முதன்மை அமர்வு நீதிபதியும், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவருமான பல்கிசின் வழிகாட்டுதலின்பேரில், குரும்பலூரில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான சட்ட உதவி மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு பெரம்பலூர் மாவட்ட எஸ்.சி., எஸ்.டி. சிறப்பு நீதிமன்றத்தின் நீதிபதி மலர்விழி தலைமை தாங்கி பேசினார்.

அவர் பேசுகையில், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்களை தீண்டாமை மற்றும் வன்கொடுமைகளில் இருந்து பாதுகாத்திட வன்கொடுமை தடுப்பு சட்டம் இயற்றப்பட்டு உரிய பாதுகாப்பினை தருகிறது. எந்தவொரு மனிதரையும் கட்டாயப்படுத்தி வேலைகள் செய்ய வைப்பது சட்டப்படி தண்டனைக்குரியது. வன்கொடுமைகளை எந்த வடிவில் ஏற்படுத்தினாலும், அவற்றை தடுப்பதற்கும், அதற்கான வழக்குகளை நடத்துவதற்கும் பெரம்பலூர் மாவட்டத்தில் எஸ்.சி., எஸ்.டி சிறப்பு நீதிமன்றம் செயல்படுகிறது. மேலும் அவர் பொதுமக்கள் சட்ட விழிப்புணர்வினை அடைந்து, சட்ட பாதுகாப்பினை பெற மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயல்படுகிறது என்பதனை விளக்கி பேசினார்.

இதையடுத்து மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளரும், சார்பு நீதிபதியுமான லதா பேசுகையில், பொதுமக்களுக்கான சட்ட உதவியினை எளிமையாக கிடைத்திடும் வகையில் சட்ட உதவி மையம் குரும்பலூர் பேரூராட்சியில் செயல்படுகிறது. உடனடி சட்ட உதவியும், விழிப்புணர்வும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மூலம் பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறது, என்றார்.

பெரம்பலூர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் கிறிஸ்டி பேசுகையில், அரசின் மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு வழங்கப்பட்டு வரும் அனைத்து திட்டங்கள், பயன்களை அடைவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை பொதுமக்களுக்கு விரிவாக எடுத்துக் கூறினார். முகாமில் குரும்பலூர் பேரூராட்சி செயல் அலுவலர் தியாகராஜன் கலந்து கொண்டார். முடிவில் வக்கீல் பகுத்தறிவாளன் நன்றி கூறினார். முகாமிற்கான ஏற்பாடுகளை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு பணியாளர்கள் மற்றும் சட்ட தன்னார்வலர்கள் செய்திருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published.