பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டத்தின்படி பாதிக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் கற்பழிப்பு வழக்குகளில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு அவர்கள் வசிக்கும் இடம் தேடி நேரடியாக சென்று, அவர்களுக்கு மன ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் உதவி மற்றும் ஆலோசனைகள் வழங்கிடவும், அவர்கள் தன்னம்பிக்கையுடன் வாழ, பாதுகாப்பு வழங்கிடவும் ஒவ்வொரு அனைத்து மகளிர் காவல் நிலையத்திலிருந்தும் இரண்டு பெண் காவல் ஆனிநர்கள் வீதம் சென்னை பெருநகர காவல்துறையில் உள்ள 35 அனைத்து மகளிர் காவல் நிலையங்களிருந்தும் 70 பெண் காவல் ஆளிநர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு அதற்குரிய பயிற்சி மற்றும் வழிகாட்டுதல்களை அளித்து மேற்படி பணியில் அவர்களை ஈடுபடுத்த “தோழி” என்ற பெயரிலான திட்டத்தை இன்று 8.11. 2019 காலை 11. 30 மணிக்கு சென்னை பெருநகர காவல் ஆணையாளர் முனைவர்.திரு.A.K.விசுவநாதன் I.P.S,. அவர்கள் சிறப்புரையாற்றி துவக்கி வைத்தார்.
ச. அரவிந்தசாமி போலீஸ் இ நியூஸ் சிவகங்கை மாவட்ட நிருபர் மற்றும் ஆல் இந்தியா ஜர்னலிஸ்ட் கிளப்பின் இளைஞரணி தலைவர் சிவகங்கை மாவட்டம்.