15.11.19 திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள த.சி.கா 14ம் அணியில் இன்று வெள்ளிக்கிழமை காவலர் நிறைவாழ்வு பயிற்சி முகாமினை பழனி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு.விவேகானந்தன் அவர்கள் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்கள். இந்நிகழ்ச்சியில் காவலர்களுக்கு ஏற்படும் மனச்சோர்வை நீக்கும் விதமாக பயிற்சி வகுப்புகளும், காவலர் பணியினை சிறப்பாக எப்படி செய்வது குறித்த பயிற்சிகளும் அளிக்கப்பட உள்ளது.
Related Articles
விருதுநகரில் முன் விரோத பகையின் காரணமாக அதிமுக நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்,கொலைக்கு காரணமாக இருக்கின்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர், அதன் விபரம் பின் வருமாறு…
விருதுநகர் மாவட்ட செய்திகள்: -விருதுநகர் அல்லம்பட்டி அண்ணா புதுத் தெருவைச் சேர்ந்தவர் சண்முகவேல் ராஜன் (44)இவர் கட்டிட கட்டுமான பொருள்களை விற்பனை செய்து வருகிறார் மற்றும் ரியல் எஸ்டேட் தொழிலையும் செய்து வந்தார், அதிமுகவில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு இவருக்கு மாணவரணி அவைத் தலைவராக பொறுப்பு வழங்கப்பட்டது. இவரக்கு மனைவி மற்றும் 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் நேற்று இரவு வீட்டில் இருந்து வெளியே வந்த சண்முகவேல் ராஜனை வீட்டு வாசலில் வைத்து மர்ம கும்பல் […]
தன்னலம் கருதாமல் என்றும் கடமையே உயிர்மூச்சாக கொண்டு மக்கள் பணியில் தொய்வில்லாமல் பணியாற்றி வரும் காவல்துறைக்கு சமர்ப்பணம் செய்வதற்காக…
தூத்துக்குடி மாவட்டம்:- தன்னலம் கருதாமல் என்றும் கடமையே உயிர்மூச்சாக கொண்டு மக்கள் பணியில் தொய்வில்லாமல் பணியாற்றி வரும் காவல்துறைக்கு சமர்ப்பணம் செய்வதற்காக… போலீஸ் இ நியூஸ் சார்பாக தினசரி காலண்டரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு.ஜெயக்குமார் அவர்களுக்கு தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்களான திரு.ராதா கிருஷ்ணன் மற்றும் திருமுத்துக்குமார் ஆகிய இருவரும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அவர்களை நேரில் சந்தித்து அளித்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது…
அடையாளம் தெரியாத ஆண் பிணங்கள்
அடையாளம் தெரியாத ஆண் பிணங்கள் மதுரை மாட்டுத்தாவணி பஸ் நிலையத்தில் 6-வது பிளாட்பாரம் அருகே 70 வயது மதிக்கத்தக்க ஒரு முதியவர் இறந்து கிடந்தார். அவர் கருப்பு, வெள்ளை கோடு போட்ட டி-சர்ட் அணிந்திருந்தார். இதேபோல் மாட்டுத்தாவணி டவுன் பஸ் நிறுத்தம் அருகே 55 வயது மதிக்கத்தக்க நபர் இறந்து கிடந்தார். வெள்ளை சட்டை அணிந்திருந்தார். இவர்களை பற்றி விவரங்கள் எதுவும் தெரியவில்லை. இதுகுறித்த புகாரின்பேரில் மாட்டுத்தாவணி போலீசார் அவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி […]





