தந்தை பெரியாரின் 143வது பிறந்தநாளை ஒட்டி இன்று சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்கப்படுகிறது.
*பெரியார் பிறந்த தினம் சமூகநீதி நாளாக கொண்டாடப்படும் என்று முதலமைச்சர் அறிவித்ததை தொடர்ந்து இன்று தமிழகம் முழுவதும் சமூக நீதி கொண்டாடப்பட்டு வருகிறது. மதுரை அவனியாபுரத்தில் உள்ள பெரியார் சிலைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்நிகழ்ச்சியில் பாராளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கலந்து கொண்டார். அவனியாபுரம் காவல் ஆய்வாளர் திரு. பிரபு தலைமையில் உதவி ஆய்வாளர் திரு.சேதுராமன் போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு.தங்கமணி உதவி ஆய்வாளர் திரு.நவாஸ்தீன் மற்றும் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.