Police Department News

காவலர்களுக்கான உங்கள் சொந்த இல்லம் திட்டம் அமைய உள்ள இடம் மற்றும் மன்னார்குடி நகர காவல்நிலையத்திற்கு புதியகட்டிடம் கட்டப்பட உள்ள இடம் ஆகியவற்றை தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி கழக காவல்துறை இயக்குனர் (DGP) அவர்கள் நேரில் ஆய்வு.

காவலர்களுக்கான உங்கள்
சொந்த இல்லம்
திட்டம் அமைய உள்ள இடம் மற்றும்
மன்னார்குடி நகர காவல்நிலையத்திற்கு
புதியகட்டிடம்
கட்டப்பட உள்ள இடம் ஆகியவற்றை
தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி கழக
காவல்துறை இயக்குனர் (DGP) அவர்கள் நேரில் ஆய்வு.

காவலர்களுக்கான உங்கள் சொந்த இல்லம்
திட்டத்தின்கீழ்
தனி வீடுகள் கட்ட
தமிழக அரசு பிறப்பித்த ஆணையைத் தொடர்ந்து
திருவாரூர் மாவட்ட காவல் அலுவலர்களுக்கு
மன்னார்குடி நகர
காவல் சரகம் மூவாநல்லூர் பகுதியில் 4.66 ஏக்கர்
இடம் தேர்வு
செய்யப்பட்டுள்ளது.

மேலும் இதேபோன்று
மன்னார்குடி நகர காவல் நிலையத்திற்கு புதிய கட்டிடம் அமைக்க
மன்னார்குடி
பைபாஸ் சாலையில்
6000 சதுர அடி இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

மேற்படி
இடங்களுக்கு தமிழ்நாடு
காவலர்
வீட்டு வசதி கழக காவல்துறை இயக்குனர்( DGP)
திரு.A.K.விஸ்வநாதன் IPS
அவர்கள்
இன்று (09.10.21)
நேரில் வருகை தந்து பார்வையிட்டு
ஆய்வு மேற்கொண்டார்கள்

ஆய்வின்போது
தஞ்சை சரக காவல்துறை துணைத்தலைவர்
திரு.பிரவேஸ்குமார் IPS அவர்கள் மற்றும்
மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
திரு.C.விஜயகுமார் IPS அவர்கள்
உடனிருந்து திட்டம் குறித்து விளக்கினார்கள்.

Leave a Reply

Your email address will not be published.