Police Department News

அருப்புக்கோட்டை காரியாபட்டி மேல்நிலைப் பள்ளியில் காவல்துறை சார்பில் பெண் குழந்தை பாதுகாப்பு மற்றும் கொரானா விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

விருதுநகர் மாவட்டம்:-

அருப்புக்கோட்டை காரியாபட்டி மேல்நிலைப் பள்ளியில் காவல்துறை சார்பில் பெண் குழந்தை பாதுகாப்பு மற்றும் கொரானா விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

விருதுநகர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே குழந்தை திருமணம், பெண்கள் குழந்தைகள் காணவில்லை, போக்சோவில் இளைஞர்கள் கைது என தொடர்ச்சியாக இது போன்று சம்பவங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

இந்த சூழ்நிலையில் விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.மனோகர் இ.கா.ப அவர்கள் உத்தரவின் பேரில்

அருப்புக்கோட்டை உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு.சகாயஜோஸ் அவர்களின் வழிகாட்டுதலின்படி காரியாபட்டி காவல் ஆய்வாளர் திரு.மூக்கன் அவர்களின் அறிவுறுத்தலின் படியும் காரியாபட்டி காவல் நிலையத்தின் சார்பில் அனைத்து பள்ளிகள் தோறும் மாணவ, மாணவியற்களுக்கு சார்பு ஆய்வாளர் திரு.அசோக் குமார் தலைமையில் விழிப்புணர்வு ஏற்படுத்த தீர்மானிக்கபட்டனர்.

அதன் அடிப்படையில் காரியாபட்டி அரசு மேல்நிலை பள்ளியில் சார்பு ஆய்வாளர் திரு.அசோக் குமார் நேரில் சென்று பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

அப்போது சார்பு ஆய்வாளர் பேசும்போது
கொரோனா விழிப்புணர்வு சம்பந்தமாகவும் , பாலியல் போன்ற பிரச்சனை சம்பவம் நடந்தாலோ, பாலியல் துன்புறுத்தலில் யாராவது ஈடுபட்டாலோ உடனடியாக 1098 என்ற சைல்டு லைன் எண்ணுக்கு தகவல் தெரிவிக்கலாம்.

அன்றாடம் வேலைக்கு சென்று வரும் பெண்கள் பிரச்சினைகளை சந்திக்கநேரிடும் போது அவர்களது பாதுகாப்பு உதவிக்கு என 181 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

வளரும் குழந்தைகளுக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு செய்யும் நபர்கள் போக்சோ சட்டத்தின் கீழ் 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், அபராதமும் விதிக்கப்படுகிறது.

குழந்தை திருமண தடை சட்டத்தின் படி 2 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவித்தார்.

மேலும் பள்ளி மாணவிகளுக்கு குட் டச், பேடு டச், & டோன்ட் டச் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

இந்நிகழ்ச்சியில் காரியாபட்டி அரசு மேல்நிலைப் பள்ளியின் தலைமையாசிரியர் உட்பட ஆசிரியர்,ஆசிரியை என பலரும் கலந்து கொண்டனர்.

காலம் மாறினாலும் அன்றிலிருந்து இன்று வரை பெண்களுக்கான பாலியல் தொந்தரவுகள் இருந்த வண்ணம் உள்ளது அதனை தடுக்கவும் வழிகாட்டவும் இன்றைக்கு தமிழக காவல் துறை இருக்கின்றது.

Leave a Reply

Your email address will not be published.