மதுரை திடீர்நகர் பகுதியில் வாலிபரை அரிவாளால் வெட்டிய பெண் உள்பட 6 பேர் கைது
மதுரை மேல வாசல் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு காலனியை சேர்ந்த பெருமாள் மகன் முருகன் வயது 20, இவர் வீட்டின் வாசலில் நின்று கொண்டிருந்த போது அங்கு வந்த கும்பல் முருகனை சரமாரியாக அரிவாளால் வெட்டி விட்டு தப்பியது அரிவாள் வெட்டில் படுகாயமடைந்த முருகன் அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனை தொடர்ந்து முருகனின் தாயார் காளியம்மாள் மதுரை திடீர் நகர் காவல் நிலையத்தில் புகாரளித்தார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.முன்விரோத தகராறில் முருகனை தாக்கியதாக ஜெபராஜ் தினேஷ் சிலம்பரசன் அவரது சகோதரர் பாண்டியராஜன் நந்தினி மற்றும் 17 வயது சிறுவன் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர்