மதுரையில் தெப்பகுளம் எஸ்.எஸ்.காலனி புதூர் பகுதிகளில் போலீசாரின் சோதனையில் 4 கிலோ கஞ்சா பறிமுதல் 5 பேர் கைது
மதுரை தெப்பக்குளம் பகுதியில் போலீசாரின் சோதனையில் 4 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதனை தொடர்ந்து சூரிய பிரகாஷை கைது செய்த போலீசார், தப்பி ஓடிய திவாகர், சுதர்சன் ஆகிய 2 பேரை தேடி வருகின்றனர்.
மதுரை கேட்லாக் ரோடு சந்திப்பில் தெப்பக்குளம் போலீசார் திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது பாலரங்காபுரம், சங்கிலி மகன் சுந்தரேஸ்வரன் (வயது 19) என்பவர் கஞ்சா விற்பது தெரிய வந்தது. அவரிடம் இருந்து 50 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
இதேபோல் எஸ்.எஸ்.காலனி போலீசார் டோக் நகர் சந்திப்பில் வாகன சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு ஒரு பைக் வந்தது. அதில் 3 பேர் இருந்தனர். அவர்களிடம் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது அவர்கள் 1 கிலோ 750 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து போலீசார் 3 பேரையும் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரித்தனர். இதில் அவர்கள் காளவாசல், பாண்டியன் நகர், பாண்டி (41), உசிலம்பட்டி அடுத்த கட்டதேவன்பட்டியை சேர்ந்த ரஞ்சித்குமார் (22), முத்துராமன் (20) என்பது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து கஞ்சா விற்றதாக மேற்கண்ட 3 பேரையும் எஸ்.எஸ். காலனி போலீசார் கைது செய்தனர்.
இதேபோல் மதுரை கே.புதூர் போலீசார், மங்கலக்குடி கண்மாய்க்கரை பகுதியில் நேற்று மாலை சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு பதுங்கி இருந்த 3 பேர் போலீசாரை கண்டதும் தப்பி ஓடினர். இருந்தபோதிலும் அவர்களில் ஒருவரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்து விசாரித்தனர். இதில் அவர் அந்தணேரி சுந்தர் மகன் சூரியபிரகாஷ் (21) என்பது தெரிய வந்தது. அவரிடம் இருந்து 2 கிலோ 100 கிராம் கஞ்சா மற்றும் வாள் ஆகியற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இதனை தொடர்ந்து சூரிய பிரகாஷை கைது செய்த போலீசார், தப்பி ஓடிய திவாகர், சுதர்சன் ஆகிய 2 பேரை தேடி வருகின்றனர்.